பக்கம் எண் :

பாயிரவுரை21

யொழுகலாறுடைய பலசொற்றொடராலுங் கற்றோர்காட்டப்பட்ட வெழு நிலத்தெழுந்த செய்யுணடைத்தாயும் அவற்றுட்பாட்டிற்குக் கூறிய பொருளோடுங்கூடிக் குற்றமற்ற ஓசைசெறியப்பட்டுப் புலவரானெண்ணும் படிக்குத் தலைமைசான்ற பன்னிரண்டெனலாய நாற்சீரடியின் மிகுந்துங் குறைந்தும் வரும் பாவினத்தோடும் பயில்வனவாம் நூல்களென்றவாறு. எழுநிலமாவன:- பாட்டும், நூலும், உரையும், பிசியும், முதுமொழியும், மந்திரமும், குறிப்புமொழியும். அவற்றுள் அடிவரையுளபாட்டாவன :- வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி, மருட்பா, பரிபாடல் என்பன. அடிவரையிலவாவன:- நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்புமொழி யெனக்கொள்க. என்னை? “எழுநிலத்தெழுந்த செய்யுட்டெரியி, னடிவரையில்லனவாறெனமொழிப” எனவும், “அவை தாம், நூலினான உரையினான, நொடியொடு புணர்ந்த பிசியினான, வேது நுதலிய முதுமொழியான, மறைமொழி கிளந்த மந்திரத்தான, கூற்றிடை வைத்த குறிப்பினான” என்பவற்றானு முணர்க. அன்றியும் இவற்றிற்கு முன்னர்ப் பாட்டுரைநூலேயென்னுஞ் சூத்திரத்தானுமுணர்க. எழு நிலத்தெழுந்த வென்பது வரையறைப் பண்புப்பெயர். பண்ணத்தி யென்பது பாவினம். பண்ணைத்தோற்றுவிக்கையாற் பண்ணத்தியென்று பெயராயிற்று. இவை இளம்பூரணர் முதலாயினாரொருசா ராசிரியர் நோக்கம். நச்சினார்க்கினியர் நோக்கமுமுணர்ந்துகொள்க.

(26)

27. விதியாச்செய்யுளின்மிகுத்திலக்கணமு
மதியாலுரைத்ததும்வழங்கன்ஞாபகமா
விரிந்தநூல்களுள்வேறுவேறினமாய்த்
தெரிந்தவியல்களைச்செம்மையிற்றமிதமி
வெள்ளையினகவலின்விளம்பலுமரபே.

(எ-ன்) இதுவும் அந்நூற்குக் கூறிக் கூறாத வொழி பெதிரது போற்றலென்னுமுத்தியாற் கூறுதனுதலிற்று.

(இ-ள்) இங்ஙனங் கூறப்பட்ட விலக்கண நூல்களை அகவலின் வெள்ளையி னறைகவென்று முந்து நூல் விதித்தமையுளவாகவும், விதியாது நீக்கிய கட்டளைக்கலித்துறை, ஆசிரியவிருத்த மென்னும் பாவினத்தாற் பின் பிலக்கண நூல்செய்தோ ரிலக்கணங்களைக் கூறியதுங் கற்றோரா