இஃ திரண்டாமடியினிறுதி தனிச்சொற்பெற்று நேரிசைவெண்பாவிற் சிறிது வேறுபட்டு மூன்றுவிகற்பத்தான்வந்த இன்னிசை வெண்பா. அலங்காரம் இதுவுமதுஎன்னை? முதலே யுவமையும், புயத்துள்ளாங்கரும்பென்ன மாட்டேறில்லாவுருவகமும் (?) கரும்பு முல்லையரும்பு செவ்வாய் வெண்ணகையென்ன நிரனிறையும் விரோதமும், தன்கட்டோன்றியபுணர்வு பற்றிய வுவகையும் வந்தமையாலென்றறிக. முகத்தாமரையைமுழுதடக்கலோடென் னகத்தாமரைகவர்ந்ததற்புதம்பொற்பூண்முலையாய் காவிமலரனையகண்ணிணையைக்கைக்காந்தட் பூவின்மறைத்திடுமிப்போது | (584) |
அலங்காரம் இதுவு மது. இதனுள், முகத்தாமரை, கைக்காந்தள் எனவே உருவகமும், முகத்தாமரையை முழுதடக்கலோடு என் அகத் தாமரையையுங் கவர்ந்ததெனவே அசங்கதியும், காவிமலரனையவெனவே உவமையும், கைக்காந்தள் காட்சிப்பொருளல்லாத அகத்தாமரையையுங் கவர்ந்ததெனவே யற்புதமும், உவகையுட்சார்ந்த வியப்பும் வந்தமையா லென்றறிக. பகுதி - இடந்தலை. துறை - நாணிக்கண்புதைக்கவருந்தல். பா - இரண்டுவிகற்பத்தால் வந்த இன்னிசை வெண்பா. மாதராய்தென்னரங்கன்மால்வரைவாழ்மாதராள் காமனிரதியெனுங்காட்சியாள்--காமவேள் பூவாளியென்பவற்றுண்மன்னுயிருண்பூவாளி கண்டார்நிறையினையுண்கண். | (585) |
அலங்காரம் இதுவுமது. இதனுள் உவமையும், அதிசயமும், சொற்பின்வருநிலையும், வியப்பென்னுஞ் சுவையும் வந்தமையா னறிக. பா - அடிதோறும் ஒரூஉத்தொடைபெற்று நேரிசைவெண்பாவிற் சிறிது வேறுபட்டுவந்த இன்னிசைவெண்பா. பகுதி - சேட்படை. துறை - அவயவங்கூறல். (165) 63-வது சங்கீரணம் முற்றும். ------- |