விருவினையொருங்குவென்றிறைநிலையிஃதென வொருதலைபற்றினரிருமையுமுணர்ந்தோர் முக்குணமவற்றுண்முற்குணனமைந்தவருட னாலாங்கடவுள்வீற்றிருக்குநற்றிசைவரு மிளங்கதிரகிலத்தின்னுயிரஞ்ச வாழ்நாளறுதியில்வௌவுதற்கமைத்த நமன்றிசையெழுதிறனிறும்பூதென்ன வறுகாலஞ்சிறையளிக்குலநான்குளர் முருகவிழ்நறுந்தார்முந்நூன்மார்பத் திருபிறப்பாளனோரிடத்தெதிருபு நலங்கிளரொருதனிமுதலெனநாடிப் பொலங்கழலிரண்டையும்புலனுறுமேதகு முப்பொறிகளினான்முயற்சியிற்போற்றலு நாற்பொருள்பயக்கநற்கனிவாயினைத்திறந் தேற்புடைச்செய்யுளைந்தினுக்கிலக்கணமென வாறறியந்தணரருமறைப்பொருளா லெழுகடற்புவனத்தெழுந்திறைவெளிவர வறுசுவையினுளதிமதுரமுக்கியச்சுவை யுறுபொருளைந்துடனுயர்தமிழ்மொழியா னால்வகைப்பனுவன்மூவுலகமுமளந்தவ னிருசெவிக்கமுதாமெனவினிதளித்த வொருபேராண்மையினுயிர்கடாமனைத்தும் பிறந்திறந்துழலுமப்பெரும்பிணிதவிர்த்தருள் ஞானபூரணசுகோதயநாவீற மானபூடணகுருகாபுரிவரோதய மறுசமயத்தவர்மத்தமால்யானையைத் தெறுமொருசிங்கமாந்திருப்பெரும்பூதூர் வருமெதிராசனைமனமகிழ்ந்தாண்ட விருசரணாம்புயத்தென்னையுமொன்றா யருள்புரிந்தாண்டதற்காதிக்காலத் திம்மாநிலத்தென்பொருட்டாற் கைம்மாறெவனீகைக்கொண்டதுவே. | (803) |
இஃது, எழுகூற்றிருக்கை. |
|
|