பக்கம் எண் :

(எச்சவியலுரை)507

நெஞ்சத்தடங்காதநேரிழைநின்னோடுவரிற்
கஞ்சத்தடங்காண்கடம்.
(816)

இது காமமிகுதியான்வந்த மாறுபடுபொருண்மொழி. அச்ச மிகுதியான்வருவனவும் வந்தவழிக் கண்டுகொள்க.  

(5)

305. உரியசொற்பலபொருளொன்றினொன்றாதன
பிரிபொருட்சொற்றொடரெனும்பெயருடைத்தே.

(எ-ன்) முறையானே பிரிபொருட்சொற்றொடரெனும் வழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) செய்யுளகத்துப் புலவனாற்சேர்த்தற்குரிய பலசொற்களினது பலபொருள்களு மொன்றினோடொன்று பொருந்தாதனவாகச் சொல்லப்பட்டது பிரிபொருட்சொற்றொடரெனும் பெயரினையுடைத் தென்றவாறு.

எனவே வேறுவேறுநோக்கப் பொருளுடையனவாய்க் கூட்டிநோக்க வொருபொருளாக வுரைக்கப்படா தென்றவாறு. இதனுள் ஒன்றென்பது சொல்லெச்சம்.

கங்கைக்குக்கன்னிநெடுங்காதங்கஞ்சமலர்
மங்கைக்குமாயோன்மணவாள--னங்கைக்கு
ளெட்டாவுறுப்புடலுள்யாதுமிலைக்காமனெனப்
பட்டானிரதிபதி.
(817)

இது பிரிபொருட்சொற்றொடர். இதனுள், பலசொல்லுந் தனித் தனிநோக்கப் பொருளுடைத்தாய்க் கூட்டிநோக்கப் பொருளன்றாதல் கண்டுகொள்க.   

(6)

306. அதுவே,
கள்ளுண்மாந்தர்பித்தரிற்கடிவரையில.

(எ-ன்) இதுவும் முன்பெய்திய திகந்துபடாமற் காக்கின்றது.

(இ-ள்) முன்மொழிந்த பிரிபொருட்சொற்றொடர் கள்ளுண்டு களித்தமாந்தராற் கூறுமிடத்தினும் பித்தினான்மயங்கப்பட்டார் கூறுமிடத்தினும் வழுவென்றுநீக்கப்படா தென்றவாறு.

கள்ளிதனிற்பிறந்தகள்ளிற்கடுந்தேறல்
வள்ளிதனைப்பெற்றபுளிமாந்தேறல்--வெள்ளிமலை