பக்கம் எண் :

512மாறனலங்காரம்

அருட்குணத்துக்கூடாதென்றாய்ந்துரைத்தபின்னும்
பொருட்ககல்வலென்றேபுகன்றீர்--மருட்கைமிகுங்
கொன்னுனைவேல்போன்றவிழிக்கோதைபொருட்டாற்குறித்திங்
கென்னுனையான்சொல்வேனினி.
(825)

இதனுள், புகன்றீரெனற் வுபசாரப்பன்மைக் கென்னுமையான் சொல்வே னென்னாது என்னுனையான்சொல்வே னென்றதனாற் பால் வழுவாயிற்று.

(14)

314. மரூஉக்கட்டுரைச்சொலின்வழுவின்றதுவே.

(எ-ன்) சிறுபான்மை கடியப்படாதென்ப துணர் - ற்று.

(இ-ள்) அச்சொல்வழு மரூஉமொழியாய்வருங் கட்டுரைச் சொல்லோடுங் கூடிவருமெனின் வழுவில்லையா மென்றவாறு.

மன்றல்கமழுமலைநாட்டும்வண்டமிழ்தேர்
நன்றிபயில்பாண்டிநாட்டகத்தும்--வென்றிபயில்
சோணாட்டகத்துந்துயின்மாயனைத்துதிப்பார்
காணார்பிறவிக்கடல்.
(826)

இதனுள், மலையமானாடென்பது மலைநாடென்றும், பாண்டியனா டென்பது பாண்டிநாடென்றும், சோழனாடென்பது சோணாடென்றும் மருவா யடிப்படவந்த வழக்காற்றால்வந்து வழுவின்றாயிற்று. துறை- கடவுள்வாழ்த்து.   

(15)

315. ஆற்றல்சாலெழுத்தினுளமைத்தசந்தியின்வகை
மாற்றமதுறவழுவுதல்சந்திவழுவே.

(எ-ன்) வைத்தமுறையானே சந்திவழுவாமா றுணர்-ற்று.

(இ-ள்) பெருமையொடுகூடிய வெழுத்திலக்கணத்தினுள் விதிக்கப்பட்ட சந்திகளின்கூறுபாடு நூல்கூறிய கூறுபாட்டான்வாராது செய்யுளகத்து வழுவுதல் சந்திவழு வென்னுங் குற்றமா மென்றவாறு.

பொய்யில்பொருண்மேற்புரிந்தினிநீபோகிலிவண்
மெய்யிலெழினலமும்வேறுபோந்--தொய்யிலுறாத்
தோள்பைங்கழையெனலாந்தொல்கவின்போகத்துயில்போம்
வாள்கண்ணிணைக்கெழுதாண்மை.
(827)