பக்கம் எண் :

பொதுவியலுரை65

முன்புலகமேழினையுந்தாயதுவுமூதுணர்வா
ரின்புறக்கங்காநதியையீன்றதுவு--நன்பரதன்
கண்டிருப்பவைகியதுங்கான்போயதுமமிர்த
முண்டிருப்பாருட்கொண்டதும்,
(19)

வெந்தகரியதனைமீட்டுமகவாக்கியது
மந்தச்சிலையினைப்பெண்ணாக்கியதுஞ்--செந்தமிழ்தேர்
நாவலன்பின்போந்ததுவுநன்னீர்த்திருவரங்கங்
காவலன்மாவலவன்கால்.
(20)

இவையிரண்டும் பெயர்ப்பெயர்கொண்டுமுற்றிய யுகளகாந்திய குளகம். என்னை? “பெயர்நிலைக்கிளவிகாலந்தோன்றா, தொழினிலை யொட்டு மொன்றலங்கடையே” என்றாராகலின், இடுகுறியாய்க் கால் எனக் காலமுந் தொழிலுந் தோன்றாதுநின்றவாறு காண்க. திணை - இதுவுமது. துறை - கடவுள்வணக்கம். ஒழிந்த ஆதியினும் இடையினும் யுகளககுளகம் வந்தவழிக் கண்டுகொள்க. யுகளககுளகம் முற்றும்.

தொடுத்துமுத்தலைச்சூலவன்படையினைத்துண்டப்
படுத்துவெஞ்சினத்தாடகையுயிர்நமன்பகுவாய்
மடுத்துவேள்விகாத்தெதிர்ந்தபோர்நிருதர்க்குமரணங்
கொடுத்தடுந்தொழிற்கரன்முதலவர்க்குவிண்கொடுத்தே,
(21)

கிளைத்துநாகவன்பிடர்மிசைக்கிளர்மராமரமேழ்
துளைத்துவாலிமார்பமுந்துளைத்தடற்கருஞ்சுடுதீ
விளைத்துவேலையுளுருகெழுகோதண்டமேனாள்
வளைத்துவாய்மையோர்வடிவெடுத்தனையதோர்வாளி,
(22)

கும்பனைப்பொருநிகும்பனைக்கும்கன்னனைநீ
டம்புராசியிற்குரைத்தெழுபலப்படையதனைச்
செம்பொனாலயம்விருப்புறத்தெசக்கிரீவனைக்கொன்
றெம்பிரான்சனகியைமணந்தாடலெய்தியதும்.
(23)

இவைமூன்றும் வினைகொண்டுமுற்றிய சாந்தானிகாதிகுளகம். திணை - வாகை. துறை - வில்வென்றி.