பக்கம் எண் :

98மாறனலங்காரம்

காமமென்னுங் குழவிச்செல்வத்தையுடைய பரத்தையரிடத்தே தேடிக் காண்பாயாக ; அஃதன்றி யெம்மிடத்துக்காண்ட லரிதென்றவாறு.

காழ் - கொட்டை. ஊழில் - ஊழ்வினையாலேயெனினுமாம். இது கௌடவுதாரம். என்னை? ‘காழல் கனியுண் கடுவன் களங்கனியை யூழிற்பருகியுருகு திருமூழிக்கள’ மெனவே யக்கடுவன்போல, உத்தமமாகிய விவளோடும் உள்ளும் புறம்பும் ஒருநீர்மைத்தா மென்மையோடும் உவர்ப்பில்லாத பேரின்பத்தைத் துய்த்த தலைவன், இழிந்த வியற்கையை யுடையராய்ப் புறம்பு பொருணசைக்காய்ச் சிறிதுநெகிழ்ந் துண்ணெகிழ்ச்சியற்ற பரத்தையரிடத்தே யுவர்த்த சிற்றின்பத்தைத் துய்த் தவ்வின்ப மீட்டுந்துய்ப்பா னவர்சேரிவிட்டு நீங்கானாயினானென வுள்ளுறையுவமங் குறிப்பிற் கொள்ளக்கிடந்தமையானும், காமக்குழவி வளத்தாரிட மெனவே யிஃது எமது காதற்புதல்வன் என்னுஞ் செல்வத்தையுடைய மனையென்பதூஉம், யாம் புதல்வற்பயந்த மூப்புடையே மென்பதூஉம், இன்னும் அவ்விலேசானே யெம்மிடத் தவர்பெறு மின்பம் எமக் கவர்கொளுத்தக்கொண் டியாங்கொடுக்கு மியற்கையின்பமே யல்லாது பலரையுந்தோய்ந் தவரவர்கொளுத்தக் கொண்ட பல விகற்பமாகிய செயற்கையின்ப மெம்மிடத்தில்லையே யென்னுங் கூற்று மாகக் குறிப்புங் கூற்றுங் குறிப்பினாற் கொள்ளக் கிடந்தமையானே யிவ்வாறு வேண்டுவர் கௌடரெனக்கொள்க. பகுதி - இதுவுமது. துறை - பாணனொடு கூறல். கூற்று - தோழிகூற்று.

நாம்பிரமமென்றேநவில்வாருமன்னுயிர்க
டாம்பிரமத்தொன்றுமெனுஞ்சார்பாரு--மாம்பிரம
நாரணனோவென்பாருநாவீறுடையபிரா
னாரணப்பாக்கற்றுணராதார்.
(104)

என்பது, பேரானந்தச் சிற்குணாதிகச் சுடர்ச்சொரூப ரூபப் பரத்துவ மென்னும் பரமபதநாதன், அநிருத்தனாகி யுந்தியந்தாமரைப் பொகுட்டிற் பலகோடியண்டங்களைப் படைத்துப் பலகோடி யண்டந்தோறும் பலகோடி பிரமாதிகளைப்படைத் தழிவிலதா யலகிறந்த வணுக்கடோறும் திவ்வியாத்ம சொரூப வியத்தியுடன் சருவபூத பூரண காரணனாகி மீனாவ தாரமுதலாய வவதாரங்களாலும் அம்சாவதாரங்களாலுங் காவல்பூண்டு