பக்கம் எண் :

34 பாசவதைப் பரணி

194.

ஊழிநெடுங் காலங்க ளோங்குசக்ர வாளமெனும்
பாழிநெடும் பொருப்பவள்காற் பாடகமோ பார்த்திலனால்.

(24)
   

195.

முந்தைவே தங்களே மொழிகின்ற திருவார்த்தை
சிந்தைவே றற்றவர்தஞ் சிந்தனையே திருமேனி.

(25)
  

196.

அறம்புரியு மகவாயில் காக்கின்ற தரும்போதம்
புறம்புரியும் புறவாயில் காக்கின்ற பூதமே.

(26)
   

197.

சூர்மகளிர் கருணாதி யாகியன தூயமொழி
ஏர்மகளிர் மருநிலமங் கியன்ஞான யோகமே.

(27)
   

198.

பங்கயா சனனறியாப் பான்மைத்தா லவள்பரிசின்
றிங்கியா னிவ்வண்ண மெடுத்தியம்பத் தகுவதுவோ.

(28)
   

199.

ஏறுவணம் புள்ளாதி யெனக்கற்பித் திடுவேனோ
ஏறுவணஞ் சிறந்ததவட் கின்னருட்போ தகமாமால்.

(29)
   

200.

ஆழிமழுப் படையாதி யாயுதமற் றென்கோவென்
ஏழுபிறப் பையுமெறிந்து மிளையாவன் பிலங்கவுமே.

(30)

195. “வேதமவ டிருவாயி லோது கீதம் வேறுநினை விலர்காணு மேனி மேனி” அஞ்ஞவதைப்.

196. காக்கின்ற - காக்கின்றவை. “பூதமவ டிருவாசல் காவ லாகும், போதமவ டிருமேனி காவ றானே” அஞ்ஞவதைப்.

197. சூர்மகளிர் - யோகினிகள். கருணாதி - கருணை, முதிதை, மைத்திரி, நீதி, உபேட்சை என்பன ;  “யோகினிகள் கருணாதி யான மாதர், யோக மரு நிலமாசின் ஞான யோகம்” அஞ்ஞவதைப்.

198. “கோகனக னறியாத கோயில் கோயில் கூறரிய பெருவாழ்வை யாவர் கூற” அஞ்ஞவதைப்.

199. ஏறு உவணம். ஏறு வணம் சிறந்தது - ஏறுதற்குச் சிறந்த வாகனமாக அமைந்தது ; அருட்போதகம் - அருளாகிய யானை. “கலையேறுவணங் களியன்னமெனக் கற்பித்திடவோ சொற்பித்ததுவா, மலையேறு வணங் கிளியன்புறவந் தருள்போதகமே யவள்வாகனமே” அஞ்ஞவதைப்.

200. “பஞ்சாயுதமே திரிசூலமழுப் படையே யெனவோ பகைவெம் பிறவிக், கஞ்சாமுனெழுந் தருளாவெறியு மன்பேதிருவா யுதமாவதுவே” அஞ்ஞவதைப்.