பக்கம் எண் :

8. கூளி கூறியது 49

288.

கூளி மூத்த குரங்கெனக் கையிலோர்
      கோல்பி டித்தே யிருமிக் குலைகுலைந்
தேனை யோரிக ழக்கிழ மாகின்ற
      இளமை நாளு மியல்பென் றிருப்பனே.

(21)
   

289.

கோழை வாதம்பித் தென்கின்ற மூவரும்
      குடியி ருக்குங் குரம்பையிற் றானுழைந்
தூழி யூழியுந் துச்சிலென் னாததில்
      உறைவ னென்ன வுவந்தே யிருப்பனே.

(22)
  

290.

தவஞ்சு ருக்கிச்செய் தானஞ் சுருக்கிநற்
      றரும நன்னெறி தானுஞ் சுருக்குமே
அவம்பெ ருக்கி யவலம் பெருக்கிமற்
      றரிய பாதக மைந்தும் பெருக்குமே.

(23)
   

291.

விண்ணி னூடும் வெதுப்பழல் போன்றெரி
      வெய்ய வன்னிரை யத்தும் விசையினால்
மண்ணி னூடும் வருவதும் போவதாய்
      மாறி மாறி மணியூச லாடுமே.

(24)
   

292.

கற்ற றானுங் கருத்துறக் கற்றன
      கருத றானும் பிறர்க்கவன் காதலாற்
சொற்ற றானு முணவு குறித்தலாற்
      சுருப நன்னெறி தோய்வதற் கல்லவால்.

(25)
   

293.

293. இன்ன தன்மை யிழுதை யரசனுக்
      கென்று மென்று மிரும்பவ மீண்டவே
துன்னு துன்மதி மந்திரி சூழுமச்
      சூழ்ச்சி யார்க்குந் துணியப் படாததால்.

(26)

289. “புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுட், டுச்சி லிருந்த வுயிர்க்கு” (குறள், 340) என்பதும், ‘வாத முதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த உயிர்க்கு’ (பரிமேல். ) என்ற உரையும் இங்கே அறிதற்குரியன.

290. “அறஞ்சுருக்கு மவலம் பெருக்குமே” அஞ்ஞவதைப்.

291. “நிரையத் தோடு நெடுவான் முகட்டொடுந், தரையத் தோடுந் தனியூச லாடுமே” (அஞ்ஞவதைப். ), “உருமாறிப் பவக்கடல்வீழ்ந் தூசலெனத் தடுமாறி யுழலு மாக்கள்” திருவிளை.

293. பவம் - பிறவி. ஈண்ட - அடைய. “இந்த மன்னனுக் கென்றும் பவங்கொள, வந்த துன்மதி மந்திரி யாகுமே” அஞ்ஞவதைப்.