4. | வித்தாரக் கமலையை விமலையை மெய்க்கோவிற் புரமிசை யுரமிசை மிக்காகப் பரிபவர் தெரிபவர்
-வேதசிற் பரத்தார முத்தேவிற் பெரியவர் கரியவர் முப்பான்மைத் தொழிலினர் எழிலினர் முக்கூடற் குழகர்மெய் யழகர்பள்
-மூவகைத் தமிழ்க்கே பத்தாகப் பெயர்தரும் உயர்தரும் பத்தாளிற் பருதியர் சுருதியர் பட்டோலைக் கெழுதரு முழுதுணர்
-பாகுவத் துரைத்தோர் நத்தோலக் குருகையில் வருகையில் நட்பாகப் புளிநடு வெளிபடு நற்போதத் தருள்பொழி திருவிழி
-ஞானவித் தெனக்கே. |
(இ - ள்.) வித்தாரக் கமலையை விமலையை-சிறந்த செந்தாமரைமலரில் வீற்றிருப்பவளாகிய குற்றமற்ற திருமகளை, மெய்க் கோவில்-தன் உடம்பாகிய கோவிலின், புரமிசை-அந்தப்புரமாகிய உட்புறத்தின்மேலும், உரம்மிசை-மார்பாகிய வெளிப்புறத்தின் மேலும், (உள்-அந்தப்புரமாகிய மனத்திற்கப்பாலும், வெளி-இந்தப் புரமாகிய மார்பின்மேலும். ) மிக்காக-விருப்பம் மிகுதியாக, பரிபவர்-சுமப்பவரும், தெரிபவர்-அவளை அகக் காட்சியானும் புறக்காட்சியானும் நோக்கிக் கொண்டிருப்பவரும், வேத சிற்பரத்தர்- வேதத்திற் சிறப்பித்துக் கூறப்பட்ட மேலானவாலறிஞரும், முத்தேவிற் பெரியவர்-இந்திரன், பிரமன், திருமால் ஆகிய இம் மூவருள் பெரியவரும், கரியவர்-கரிய திருஉருவினரும், முப்பான்மைத் தொழிலினர் எழிலினர்-படைத்தல் காத்தல் அழித்தலாகிய முப்பிரிவினதாகிய தொழிலுடையவரும் அழகுடையவருமான, முக்கூடற் |