பக்கம் எண் :

138 முக்கூடற் பள்ளு

மாட்டு வகை
சிந்து
இராகம்: கல்யாணி. தாளம்: ஆதி.

109. குடைக்கொம்பன் செம்மறையன்
            குத்துக்குளம்பன் மேழை
      குடைச்செவியன் குற்றாலன் கூடுகொம்பன்
            மடப்புல்லைக் கரும்போரான்
மயிலை கழற்சிக் கண்ணன்
            மட்டைக்கொம் பன்கருப்பன் மஞ்சள்வாலன்
      படைப்புப் பிடுங்கிகொட்டைப்
            பாக்கன் கருமறையன்
பசுக்காத்தான் அணிற்காலன் படலைக்கொம்பன்
            விடத்தலைப் பூநிறத்தான்
      வெள்ளைக் காளையும் இந்த
            விதத்திலுண் டாயிரந்தான் மெய்காணாண்டே.

குடைக்கொம்பன் முதல் வெள்ளைக் காளை வரை எல்லாம் மாட்டின் பெயர்கள். இவைகளும் இயற்கையோடு பொருத்தமான பெயர்களைப் பெற்றிருத்தல் காண்க.

(இ - ள்.) குடைக்கொம்பன்-குடைவளையாக வளைந்த கொம்புள்ள காளை. செம்மறையன்-உடலில் சிவந்த நிறத்துணுக்குகள் படரப்பெற்ற காளை. குத்துக்குளம்பன்-மிகவும் வளர்ந்த குளம்புகளையுடைய காளை. குற்றாலன்-குற்றாலத்திலிருந்து வாங்கிக் கொண்டு வந்த காளை. மடப்புல்லை-ஒரு வகை மழுகலான புல்லை நிறமுள்ள காளை. மயிலை-மயிலை நிறமுள்ளது. கருந்தோல் மேல் பசுமை வாய்ந்த வெள்ளை முடியுடையதாகக் காணப்படும் நிறத்தையே மயிலை என்பது வழக்கம். மேழை-முழுவத்தை இருபுறமும் தொங்கவிட்டு அடிக்கும் மேளக்காளை. மோழை என்பதன் திரிபு எனின் கொம்பில்லாதது என்று பொருள்படும்.

(வி - ம். ) “மேளக்குடைச் செவியன்” என்றும் பாடம் உண்டு. படைப்புப் பிடுங்கி-வைக்கோற் படப்பிலுள்ள வைக்