எனவும் கூறுமாற்றான் அறிக என்பது. இனிக் கோடல் மரபு உடைய மாணாக்கன், 1“ஒருகுறி கேட்போ னிருகாற் கேட்பிற் பெருக நூலிற் பிழையா டிலனே.’’ |
எனவும், 2“முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும்.’’ |
எனவும், 3“ஆசா னுரைத்தவை யமைவரக் கொளினுங் காற்கூ றல்லது பற்றல னாகும்.’’ |
எனவும், 4“அவ்வினை யாளரொடு பயில்வகை யொருபால் செவ்விதி னுரைப்ப வவ்விரு பாலு மையறு புலமை மாண்புநனி யுடைத்தே.’’ |
எனவும், 5“பிறர்க்குரை யிடத்தே நூற்கலப் பாகுந் திறப்பட வுணருந் தெளிவி னோர்க்கே.’’ |
எனவும் கூறினார் ஆகலின், அவ்வாறு பயிலுமேல் முற்ற அறிந்தான் ஆகும் என்பது. இனி ஈவோன் தன்மையுள் ஈதல் இயற்கையும், கொள்வோன் தன்மையுள் கோடல் மரபும் அடங்கும் ஆகலின், ஆத்திரையன் பேராசிரியன் பன்னரும் சிறப்பின் நல்லாசிரியர் எனவும், நன் மாணாக்கர் என்ப எனவும், பொதுப்பாயிரத்தை இருவகைத்து ஆக்கித் தொகுத்துக் கூறினான். இனி மலை முதலாயவற்றானும் அன்னம் முதலாயவற்றானும் கிளந்த அல்ல வேறு பிற தோன்றினும் நன்மதி நாட்டத்து உணர்ந்தனர் கொண்டுகூறிய குன்றினும் முதல்நூல் கூட்டித் தோமின்று உணர்க. இஃது உரைப் புறனடை. இனி நன்னூலார் தாம் அறிந்த ஆற்றானே நூல் இயல்பும் பொதுப் பாயிரமாம் எனக் கொண்டு,
1,2தொல், பாயிரம், நச்சினார்க்கினியர் உரை மேற்கோள். 3,4தொல், பாயிரம், இளம்பூரணர் உரை மேற்கோள். 5தொல், பாயிரம், நச்சினார்க்கினியர் உரை மேற்கோள். |