பக்கம் எண் :

16தொல்காப்பியம்-உரைவளம்

3அஃதேல், பல சொல் ஒரு பொருட்குரியவாதலும், ஒரு சொல் பல பொருட்குரிய வாதலும் உரிச்சொல் முதலாகிய இயற்சொற்கும் உண்மையான் அது திரிசொற்கு இலக்கணம் ஆமாறு என்னையெனின், அது திரிசொற்கு இலக்கணம் உணர்த்தியவாறன்று; அதனது பாகுபாடுணர்த்தியவாறு திரிபுடைமையே திரிசொற்கு இலக்கணமாதல் ‘சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல்’ என்பதனாற் பெற வைத்தார். கிள்ளை மஞ்ஞை என்பன ஒரு சொல் ஒரு பொருட்குரித்தாகிய திரிசொல்லாதலின் இருபாற் றென்றல் நிரம்பா தெனின், அற்றன்று; ஆசிரியர், ‘இருபாற் றென்ப திரிசொற்கிளவி’ எனத் தொகை கொடுத்தாராகலின் ‘கிள்ளை மஞ்ஞை என்பனவற்றோடு ஒரு பொருட்கிளவியாய் வரும் திரிசொல் உளாவாகல் ஒன்றோ இவை பிறபொருள் படுதல் ஒன்றோ இரண்டனுள் ஒன்று திட்ப முடைத்தாதல் வேண்டும் என்னை? ஆசிரியர் பிற கூறாமையின் என்பது.

திரித்துக் கொண்டது இயற்கைச் சொல்லான் இன்பம் பெறச் செய்யுளீட்டலாகாமையானன்றே? அதனால் திரி சொல் எனவே செய்யுட்குரித்தாதலும் பெறப்படும்.

தெய்

திரிசொல்லாமா றுணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : ஒரு பொருள் குறித்த வேறு வேறு சொல்லாகியும், வேறு வேறு பொருள் குறித்த ஒரு சொல்லாகியும் அவ்விரு பகுதியது என்பதிரிசொல், எ-று.

எனவே, இயற்சொல்லால் உணர்த்தப்படும் பொருள் மேல் வேறுபட்ட வாய்பாட்டால் வருவன திரி சொல்லாகும் என்றவாறாம்.


3. இப்பகுதிக்கு உரையிறுதியில் சிவ. விளக்கம் பார்க்க

4. “கிள்ளை மஞ்ஞை.... உளவாகல்” - கிள்ளையுடன் ஒரு பொருட் கிளவியாய் வரும் சொற்கள் தத்தை, சுகம் மஞ்ஞையுடன ஒரு பொருட் கிளவியாய் வரும் சொல் தோகை.

5. இவை பிறபொருள்படுதல் - கிள்ளை கிளியேயன்றிக் குதிரை என்னும் பொருளும், மஞ்ஞை மயிலேயன்றிக் கோழி என்னும் பொருளும் படுதல்.