பக்கம் எண் :

எச்சங்கள் சூ. 34251

அவற்றுட் 2கடைநிலை மூன்றும் ஒரு தொடர்க்கு ஒழிபாய் எச்சமாயின. அல்லன எஞ்சு பொருட் கிளவி யான் முடிவன. எஞ்சு பொருட் கிளவி எனினும் எச்சம் எனினும் ஒக்கும்.

3பெயரெச்சம் வினையெச்சம் பெயர்வினையான் முடிதலின் ஆகுபெயராற் பெயர் வினை யென்றார்.

‘ஆயிரைந்தும் எஞ்சு பொருட்கிளவி’ என்றாரேனும் எஞ்சு பொருட்கிளவி பத்து வகைப்படும் என்பது கருத்தாகக் கொள்க.

4எச்சமாவன ஒருசார் பெயரும் வினையும் இடைச்சொல்லும் ஆதலின் பெயரியல் முதலாயினவற்றுட் பத்தும் ஒருங்குணர்த்துதற்கு ஏலாமையறிக.

முடிவும் பொருளும் ஒத்தலான் ‘என்று’ என்பதனை ‘என’ வின்கண் ஏற்றினார்.

* தெய்

எச்சக் கிளவியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.


2. கடைநிலை மூன்றாவன சொல், குறிப்பு, இசை என்பன.

3. பெயரெச்சமும் வினையெச்சமும் வினைக்குறைச் சொற்களாயினும் பெயராலும் வினையாலும் முடிதலின் அவற்றை பெயர் வினை என்று கூறுவது ஆகுபெயராம். பெயர் என்பதும் வினை என்பதும் அவற்றால் முடிக்கப்படும் எச்சங்கட்கு ஆயின.

4. குறிப்புப் பெயரெச்சம் பெயரியலிலும் வினையெச்சம் வினையியலிலும் பிரிநிலை என முதலிய எச்சங்கள் இடையியலிலும் கூறவேண்டுவன. அவை இங்கு கூறப்பட்டதற்குக் காரணம் பத்தையும் சேரக் கூறவேண்டும் என்பதே. ஒருசார் பெயரெச்சம் என்றது குறிப்புப் பெயரெச்சத்தை; தெரிநிலை வினைப்பெயரெச்சம் வினையடியாக வருவது. குறிப்புப் பெயரெச்சம் பெயரடியாக வருவது ஆதலின்.

* இவர் உரை மற்றையோர்க்கு மாறுபட்டது. காரணம் சிறப்புச் சூத்திரங்களில் சிவ. விளக்கத்திற் காண்க.