ஏனை யெச்சங்களின் முடிபு சூ. 44 | 295 |
எனப்பட்டது. அதனான்தத்தங் குறிப்பின் எச்சத்தானே முடிந்தது என்பது. இனி இசையெச்சம் ஒல்லென வொலித்தது. இடைச்சொல்லோத்துள் அறு பகுதிய என்றோதப்பட்ட ‘என’ விகற்பித்து இரண்டு முடிபு கூறப்பட்டது என்பது; மற்று ஆண்டுச் சொல்லெச்சம் என்பதில்லையால் எனின், விடை : ‘எனவென் எச்சம் வினையொடு முடிமே’ (எச்ச. 42) என்று முடித்தார், வினையை வினைதன் கண்ணதே சொல்லெச்சம்; அது கொண்டு முடிதல் இவ்வாய்பாடு. அவ்வேற்றுமை நோக்கி வேறு சொல்லெச்சம் என வேண்டினார் என்பது. முன்னர் மூன்றுமேல்வந்து முடிக்கும் எஞ்சு பொருட்கிளவியிலவென, ஒன்றுடைத்து என்பது பட்டு நின்றது, அஃது யாதோ? சொல்லெச்சம் என்பது. இனி அதற்கு முடிபு கூறுகின்றார். சேனா இ-ள் : அவ்வெச்சம் மூன்றும் சொல்லுவார் குறிப்பான் எஞ்சி நின்ற பொருளை யுணர்த்தும், எ-று. உ-ம் : | 1பசப்பித்துச் சென்றர் ருடையையோ அன்ன | | நிறத்தையோ பீர மலர் இளைதாக முள்மரம் கொல்க களையுநர்கை கொல்லும் காழ்த்த விடத்து (குறள். 879) |
என்புழி முறையானே ‘பசப்பித்துச் சென்றாரையாம் உடையேம்’ எனவும், ‘தீயாரைக் காலத்தாற் களைக’ எனவும் வந்த தொடர்மொழி, எச்சமாய் நின்ற குறிப்புப்பொருளை வெளிப்படுத்தலாற் குறிப்பெச்சமாயின.
1. பொருள் : எதிர்ப்பட்ட ஞான்றே தலையனி செய்து நின்னிற் பிரியேன் அஞ்சல் என்றவர் தாமே பின் பிரிவராயின், அவர்க்கன்றி அவர் தெளிவித்த சொல்லை மெய்யெனத் தெளிந்தார்க்குக் குற்றமுண்டோ? - பரிமேலழகர். |