பக்கம் எண் :

350தொல்காப்பியம்-உரைவளம்

ஆங்குற்ற ஆள் ஆள் உடன்பாடு ஆகும். கொடு + ப் + ஆன், படி + த் + ஆன் = சந்தி சேர்த்து உடன்பாடாகக் கொடுப்பான், படித்தான் ஆயிற்று.

செய்யாய் செய் + ஆய், ஆய் முன்னிலை விகுதி, இடைநிலை யின்றிச் சேரினும் ஒலிக்குறிப்பால் உடன்பாடு ஆகிறது.

முன்னிலையில் ஈ, ஏ

445, *முன்னிலை முன்ன ரீயு மேயு
 மந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே       (55)
  
 (முன்னிலை முன்னர் ஈயும் ஏயும்
அந்நிலை மரபின் மெய் ஊர்ந்து வருமே.)

ஆ. மொ. இல.

‘I’ and ‘E’ follow the verb of the second person
having suitable consonants to join.

நன். 336 (தொ. சூத்திரமே).

இ.வி. 358

முன்னிலை யேவல்முன் ஈயும் ஏயும்
அந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே.

முத்து. ஓ. 117 (தொல். சூத்திரமே).

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இடைச்சொல்லோத்தினுள் ஒழிந்து நின்ற ஒழிபு உணர்த்துதல் நுதலிற்று.

உரை : முன்னிலைக்காண்ணாக ஈகார ஏகார இடைச்சொற்கள் முன்னிலைக்குப் பொருந்திய மெய்யையூர்ந்து வரும் எ-று.


* முன்னிலை மரபின்-தெய்வச்சிலையார் பாடம்.