இளம்பூரணத்தில் உலகம், நற்குணம் என்ற இரண்டுமே ஏட்டிற் சேர்க்கப்பட்டனவோ அல்லது சற்குணம் பின்னர் என்பது நற்குணம் என்று எழுத்துத்தவற்றால் மாறுபட்டு எழுதப்பட்டதோ தெரிந்திலது. அவற்றைச் சேனாவரையர் மறுக்காமையின் இவ்வையம் வலியுறுகின்றது. நச்சினார்க்கினியத்தில் ‘வடவெழுத் தொரீஇ’ என்பதற்கு ‘உரப்பியும் எடுத்தும் கனைத்தும் கூறும் வடவெழுத்துக்களின் நீக்கி’ என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. உரப்பொடு கூடிய எழுத்துகள் க வர்க்க முதல் ப வர்க்கம் முடிய ஐவர்க்கங்களிலுமுள்ள இரண்டாம் எழுத்துகள்; எடுப்பொடுகூடிய எழுத்துக்கள் அவ்வவ் வர்க்கங்களிலும் மூன்றாம் எழுத்துக்கள்; கனைப்பொடு கூடிய எழுத்துக்கள் அவற்றில் நான்காம் எழுத்துக்கள். UU ஷ, ஸ, ஹ இவற்றை மறந்துவிட்டனர் போலும். வட்டம் முதலிய பாகதச் சொற்களை இ்ச்சூத்திரத்திற்கு உதாரணமாகக் காட்டினர் தெய்வச்சிலையர். அவற்றைமேல் வருஞ்சூத்திரத்துக்கு உதாரணமாக்கினர். சேனாவரையரும் நச்சினார்க்கினியரும், உரையாசிரியர் அவற்றைப்பற்றி இரண்டு சூத்திரங்களிலும் கூறவில்லை. இச் சூத்திரத்தில் ‘வடசொல்’ என்பதனால் இலக்கண இலக்கியங்களில் வழங்கும் சமஸ்கிருதச் சொல்லை மாத்திரம் குறித்தனரா, அவற்றோடு வடநாட்டில் பேச்சில் பழங்கும் பாகதச் சொல்லையும் குறித்தனரா ஆசிரியர் என்பது ஆராயத்தக்கது. சிவ. இச்சூத்திரத்துக்கு இளம்பூரணர் எழுதிய உரையும் உதாரணமும் கொண்டு, ‘வடசொல் என்பது தமிழ்ச் சொல்லே என்பதும், அது வடசொல்லோடு ஒத்திருத்தலின் வடசொல் எனப்படும் என்பதும் குங்குமம் முதலியன தமிழ்ச்சொற்களே என்பதும்’ அவரது கொள்கை என அறியலாம். ‘இயற்சொல் திரிசொல்’ (391) என்னும் சூத்திரவுரையில் வடசொல் என்பது ‘ஆரியச் சொற்போலும் சொல்’ என்று அவர் கூறியதும் காண்க. அதற்கேற்பவே அடுத்த சூத்திரமாகிய “சிதைந்தன வரினும் |