பக்கம் எண் :

வினையெச்சம் வேறுபடுதல் சூ. 60383

வந்தான்’ என்பதூஉம் பிறவினை கொண்டவனவாயினும், செய்தேன் எச்சத்திற்குரிய இறந்தகாலம் உணர்த்தலான், ஏனைக்காலத்திற்குரிய செயவென் எச்சத்தின் திரிபு எனப்படா. செயவென் எச்சத்திரிபாயின் செயவென் எச்சத்திற்குரிய காலம் உணர்த்தல் வேண்டும். ‘மழை பெய்ய மரங்குழைத்தது’ எனச் செயவென் எச்சத்திற்கு இறந்த காலம் உரித்து எனின்-காரணகாரியப் பொருண்மையுணர்த்தும் வழியல்லது செயவென் எச்சம் இறந்த காலம் உணர்த்தாது. ஒடித்துண்டலும் ஞாயிறு படுதலும் எஞ்சுதற்கும் வருதற்கும் காரணம் அன்மையான் ஆண்டிறந்த காலம் உணர்த்தாமையின், செய்தென் எச்சமாய் நின்று தமக்குரிய இறத்த காலம் உணர்த்தின எனப்படும். அதனாற் செயவென் எச்சம் செய்து என் எச்சமாய்த் திரிந்தன வென்றலும் அவர் கருத்தன் றென்க. ‘ஞாயிறுபட்டு வந்தான்’ என்பது ‘ஞாயிறு பட்டபின் வந்தான்’ என இறந்த காலம் உணர்த்தலும், ‘ஞாயிறு படவந்தான்’ என்பது ‘ஞாயிறு படாநிற்க வந்தான்’ என நிகழ்காலம் உணர்த்தலும் வழக்கு நோக்கிக் கண்டு கொள்க.

தெய்

வினையெச்சத்திற் குரியதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : வினையெச்சச் சொல்லும் வேறு வேறாகிய பல இலக்கணத்தையுடைய, எ-று.

வேறு குறிய என்னாது ‘பல்குரிய’ என்றது சொல்லானும் பொருளானும் வேறுபடும் என்பது அறிவித்தற்கெனக் கொள்க’ சொல்லான் வேறுபடுதலாவது, பொதுவகையான் எடுத்தோதிய செய்து, செய்யூ என்பன, உகர ஊகார ஈறாகி வருதலே யன்றிப் பிற வீற்றானும்; வருதலும், எச்சச் சொல்லாகி வரற்பாலது முற்றுச் சொல்லாகி வருதலும். பொருளான் வேறுபடுதலாவது ஒரு வாய்பாட்டான் உணரும் பொருளை மற்றொரு வாய்பாட்டாற் கூறுதலும், எல்லா வினையெச்சமும் பிரித்து நோக்குவார்க்குப் பெரும் பான்மையும் வேற்றுமைப் பொருளாகித் தோற்றுதலும்.

அவையாமாறு : செய்தென் எச்சத்துக்கண் ஓடி, போய் எனவும், செய்யூ என்பதன்கண் செய்யா யெனவும் வருவன ஈறு வேறுபட்டு வந்தன.