நிரல் நிறைப்பொருள்கோள் சூ. 9 | 55 |
“உடலும் உடைந்தோடும் ஊழ்மலரும் பார்க்கும் கடலிருள் ஆம்பல்பாம் பென்ற-கெடலருஞ்சீர்த் திங்கள் திருமுகமாச் செத்து” என, முடிப்பன வாகிய வினையும் முடிவனவாகிய பெயரும் வேறு வேறு நிற்றலின் பொது நிரல் நிறையாயிற்று. அவை கடல் உடலும், இருள் உடைந்தோடும், ஆம்பல் ஊழ் மலரும், பாம்பு பார்க்கும் என இயையும். ‘நினையத் தோன்றி’ என்றதனால் சொல்லும் பொருளும் வேறு வேறு நிற்குங்கால் நிரல்பட நில்லாது “களிறும் கந்தும் போல நளிகடற் கூம்பும் கலனுந் தோன்றும் 1தோன்றல் மறந்தோர் துறைகெழு நாட்டே” என மயங்கி வருதலும் கொள்க. தெய் நிரல் நிறை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : மேற் சொல்லப்பட்டனவற்றுள் நிரனிறையாவது வினையானும் பெயரானும் ஆராயப் புலப்படுஞ் சொற்களைச் சேரநிறுத்தி அவற்றிற்கு முடிபாக வருஞ் சொற்களைச் சேர நிறுத்துதல், எ-று. அடல்வே லமர்நோக்கி நின்முகம் கண்டே உடலும் இரிந்தோடும் ஊழ்மலரும் பார்க்கும் கடலும் கனையிருளும் ஆம்பலும் பாம்பும் தடமதியம் ஆமென்று தாம். என்பதனுள் உடலும், ஓடும், ஊழ்மலரும், பார்க்கும் என்னும் வினை, கடல், இருள், ஆம்பல், பாம்பு என்பனவற்றோடு கடல் உடலும், இருள் ஓடும், ஆம்பல் மலரும், பாம்பு பார்க்கும் என அடைவே முடிந்தவாறு கண்டு கொள்க. “கொடி குவளை கொட்டை நுசுப்பு உண்கண் மேனி” என்றவழி, கொடி, குவளை, கொட்டை என்னும் பெயர் நுசுப்பு,
1. மற்றையோர் காட்டும் உதாரணத்தில் இம்மூன்றாம் அடியில்லை. |