பக்கம் எண் :

136தொல்காப்பியம்-உரைவளம்

முருகுபுணர்ந் தியன்ற வள்ளி போலநின்
னுருவுகண் ணெறிப்ப நோக்கலாற் றலனே
போகிய நாகப் போக்கருங் கவலைச்
சிறுகட் பன்றிப் பெருஞ்சின வொருத்தல்
சேறா டிரும்புற நீறொடு சிவண
வெள்வசிப் படீஇயர் மொய்த்த வள்பழீஇக்
கோணாய் கொண்ட கொள்ளைக்
கானவர் பெயர்க்குஞ் சிறுகுடி யானே” 1      (நற்றிணை-82)

“மயில்கொன் மடவாள்கொன் மாநீர்த் திரையுட்
பயில்வதோர் தெய்வங்கொல் கேளீர்-குயில்பயிலுங்
கன்னி யிளஞாழற் பூம்பொழி னோக்கிய
கண்ணின் வருந்துமென் னெஞ்சு”2      (திணை மாலை-49)

அன்பு உற்று நகினும்-தோழி குறைமறுப்புழி அன்பு தோன்ற நகினும்.

(உ-ம்)

“நயனின் மையிற் பயனிது வென்னாது
பூம்பொறிப் பொலிந்த வழலுமி ழகன்பைப்
பாம்புயி ரணங்கி யாங்கு மீங்கிது
தகாஅது வாழியோ குறுமக ணகாஅ
துரைமதி யுடையுமெ ன்னுள்ளஞ் சாரற்
கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப்
பச்சூன் பெய்த பகழி போலச்


1. கருத்து: காம நோயும் அதனால் வந்த உடம்பின் தளர்ச்சியும் நீங்க முயங்கியதால் அழகுபெற்ற தோளையுடைய தலைவீ! சிறுகுடிக்கண் முருகனொடு கூடி உடன் போக்கினைக் கொண்ட வள்ளிபோல என்னொடு உடன் போக்கினை மேற் கொள்வாயா?

2. கருத்து: கேளிரே பொழிலிடத்திருந்தவள் மயிலோ மடந்தையோ கடலுறை தெய்வமோ அறியாமல் அழியாத இளஞாழலுள்ள பூம்பொழிலையே நோக்கிய கண்ணோடு என் நெஞ்சம் வருந்தா நிற்கும்.