பக்கம் எண் :

பொருளதிகாரம்113

குறிக்கண் எய்துவான் 1சொல்லும் வடிவும் பண்பும் ஒன்றாகக் 2கூறினானென்பது; அல்லதூஉம், உணர்த்துகின்ற திணைப் பொருளினை எளிதிற் புலப்படுத்த லுபகாரம் நோக்கியும் அவ்வாறு பகுத்தானென்பது.

“களிற்றிரை தேரிய பார்வ லொதுக்கி
 னொளித்தியங்கு மரபின் வயப்புலி போல”.

(அகம். 22)

என்புழி, பார்வலொதுக்கமாகிய வினை, பண்பெனப்படாது; என்னை? பண்பென்பது 3குறிப்பின்றி நிகழுங் குணமாகலினென்பது. 4அடையெனினும் அதுவேயெனக் கூறி மறுக்க. எனவே பார்வலொதுக்கமெனப்பட்ட வினைப்பகுதியாற் பிழையாமற் கோடற்குப் 5பார்வலொதுங்கி நின்றானென்பதும் பிறர்க்கஞ்சிப் பார்வலொதுங்கி நின்றானல்லனென்பதுஞ் சொல்லி, அவன் தலைமைக்கேற்ற உவமையாதலின், அது 6பொருட்டோற்றமாயிற்று.


1. சொல்லும் என்பது செல்லும் என்றிருத்தல்வேண்டும்.

2. கூறினானென்பது கூறின் என்றிருத்தல்வேண்டும். இப்படிப் பாடம் உள்ளது. கூறின் செல்லும் என முடிக்க. கட்புலனாம் பண்பு வடிவு என்றும், உற்றுணரும் பண்பு உரு (நிறம்) என்றும் பவானந்தம்பிள்ளை பதிப்பிலும் S. கனகசபாபதிப் பிள்ளை பதிப்பிலும் மாறி எழுதப்பட்டது. அது பொருத்தமில்லை என்பது பின் பேராசிரியரே, ‘வடிவுபற்றிய பண்பினை யிரவின்கண் உற்றுணரப்படும். வண்ணமாயி னவ்வாறுற்றுணரப்படாது என்று கூறலானும்’, தண்டியாசிரியர் ‘வடிவும் பண்பினு ளடங்குமென்று கொண்டாரேனும் இந்நூலுடையார் கட்புலனாம் பண்பும் உற்றுணரும் பண்பும் என வேறாகக் கொண்டார். அங்ஙனங் கோடல் வடிவுபற்றிய பண்பு இருளின் கண்ணு முற்றுணரப்படும்; வண்ணமாகிய (கட்புலனாம்) பண்பு இரவின்கண் அவ்வாறுணரப்படாதாதலின் வடிவினைக் கூட்டி நாலென்றார்’ என்று வரும் மாறனலங்காரத்து உரையானு முணரப்படும். (உவமையலங்காரம் 1-ம் சூத்திரம்.) 

3. குறிப்பின்றியெனவே, வினை மனத்தாற்குறித்துச் செய்யப்படுவதென்றாயிற்று.

4. அடையெனினும் = அவ்வினையை அடையென்று சொன்னாலும்; அதுவேயென்றது குறிப்பின்றி நிகழும் குணமாகிய அப்பண்பே என்றபடி.

5. பார்வலொதுங்கி நிற்றல்--பார்வைக்கு மறைந்து நிற்றல். ஒதுங்கி நின்றான் என்பது ஒதுங்குகின்றான் என்றும் பாடம்.

6. தலைமைக்கேற்ற உவமையாதலின் பொருட்டோற்றமாயிற்று என்றது--புலி தலைமகனுடைய தலைமைக்கேற்ற