பக்கம் எண் :

பொருளதிகாரம்177

அந்நிலத்திற்குப் பயப்பாடு வெளிப்படச் செய்யாமையின் உவமவிலக்கணத்துள் 1இதனையும் இலேசினாற் கொண்டாமென்பது. அற்றன்று;

“மரபே தானும்.”

(தொ. செய். 80)

என்புழி, “நாற்சொல்லிய” லெனச் சொற்றன்மையுங் கூறப்பட்டமையின் உவமையாராய்ச்சியுள் அது2கூறானென்பது. 3உம்மை இறந்தது தழீஇயிற்று; என்னை? உயர்ந்ததன்மேற்றன்றி, உயர்பிழிபுடைத்தல்லாத தன்மையுவமையுங் கொள்க வென்றமையின்.

(34)

[தடுமாறு உவமமும் உளவெனல்]

310.தடுமா றுவமங் கடிவரை யின்றே.

இதுவும் உவமத்திற்கேயாவதோர் இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று.

இ--ள் : தடுமாறுவமம்--உவமையும் பொருளும் வேறு நிறீஇ இதுபோலும் இதுவென்னாது அவ்விரண்டனையும் 4ஐயுறச் சொல்லுந் தடுமாறுவமம், இனி அவ்வாறன்றி உவமையைப் பொருளாக்கியும் பொருளை உவமையாக்கியுந் தடுமாறச் சொல்லுதலும் தடுமாறுவமமெனப்படும்; கடிவரை இன்று--அவ்விரண்டும் உவமமென்று சொல்லற்பாட்டிற் கடியப்படா என்றவாறு.

“அரிமல ராய்ந்தக ணம்மா கடைசி
திருமுகமுந் திங்களுஞ் “செத்துத்--தெருமந்து
வையத்தும் வானத்துஞ் செல்லா தணங்காகி
யையத்து நின்ற தரா.”

(பொய்கையார்)

என்பதனுள் உவமையினையும் பொருளினையும் வேறுவேறு துணியாது ஐயுற்று வையத்தும் வானத்துஞ் செல்லாது; அராவென்றமையின் இது தடுமாறுவமமாயிற்று.

“தளிபெற்று வைகிய தண்சுனை நீல
 மளிபெற்றார் கண்போன் மலரு--மளிபெற்ற


1. இது தன்மையணியுளடங்கும்.

2. கூறானாகலின் என்பது என்றிருப்பது நலம்.

3. உம்மை--உவமத்தன்மையும் என்றதிலுள்ள உம்மை.

4. உவமையுற என்றும் பாடம்: அது சிறப்பின்று.

5. செத்து--(ஒன்றாக) நினைத்து.