பக்கம் எண் :

பொருளதிகாரம்193

12. எரியினிறத்தை ஒப்ப இலவுமலர.

(கலி. 33)

13. பலரும் புகழுகின்ற ஞாயிற்றைக் கடலின்கண் கண்டாற்போல.

(முருகு. 2)

14. பொன்னுரை விளங்கினாற்போலும் தேமலையுடையராய்.

(முருகு. 145)

15. தீயினை ஒத்த ஒள்ளிய செங்காந்தளின் மழையாலே செருக்கி வளர்ந்த புதுமுகையை ஊனாகக் கருதி.

(மலைபடு. 145)

294-ம் சூத்திரம்

1. தாஞ்செய்த களவினைத் தாமே உடன்படுவாரைப்போலத் தலைகவிழ்ந்து நிலத்தைக் காலாற் கிளைத்து.

(அகம். 16)

2. தோணியைக் கடலிற் செல்லும்போது கவிழச்செய்த வணிகனைப்போல, துயரத்தைக்களையுந் துணை வேறின்றிப் புலம்பு மென்னிலையைக் கண்டும் போகமாட்டேன் என்று கூறுகின்றாய். (யா. வி. ப. 318)

3. பெரிய செல்வரது வீட்டின்கண் (அதன் வாயிலையடைந்த) வறியார்போல மீண்டுவரும் மீளச்செல்லும், திரும்பி வரும் என்னெஞ்சம்.

(முத்தொள்ளாயிரம் 88)

4. அருளினிடத்தே இத்தன்மையவாகிய கொடியவை தோன்றின் நிழலையுடைய குளத்துள் நீருள்நின்ற குவளை வெந்ததன்மைத்து.

(கலி. 41)

5. சாந்தம் உள்ளிடத்தே உண்டென்று செப்பைத் திறந்து பாம்பை அவ்வுள்ளிடத்தே கண்ட தன்மையையுடைத்து.

(நாலடி. 126)

6. மல்லரை மறத்தைக் கெடுத்த திருமால்போலே கல்லுயர்ந்த அகற்சியையுடைய சாரலிற் றன் சுற்றத்திற்கு நடுவே கூடித்திரியும் நாடனே! கேள்.

(கலி. 52)

7. இயமன் வெகுண்டாலொத்த வலியோடு பகையைக் கொண்ட இரு அரசரது மண்ணைக்கொள்ள நோக்கினாய்.

(புறம். 42)

8. உதியஞ்சேரலாதனைப் பாடிப்போன பரிசில் பெறுவாரைப்போல இப்பொழுது உவப்பாய் தோழி.

(அகம். 65)

297-ம் சூத்திரம்

1. பொன்னை உரைக்கும் (கட்டளைக்கல்) உரைகல்லை யொப்பத் தனது பசிய அணிகள் புடைத்ததாலுண்டான செஞ்சுவட்டையுடைய மார்பு.

(பெரும்பாண். 220)