பக்கம் எண் :

638மரபியல்

இ--ள் : சொல்லிய மரபின் இளமை--

“பாடலுட் பயின்றவை நாடுங் காலை.”

(3)

எனவும்,

“பாடல் சான்ற புலனெறி வழக்கு.”

(53)

எனவும் அகத்திணையியலுட் கூறிய புலனெறி வழக்கிற்றாகிய இளமை.

சொல்லுங்காலை அவையல இல--அவற்றுக்கு இலக்கணங் கூறுங்கால் வேறு பலவின்றி வரும்; இங்ஙனம் வரையறைப் பட்டன 1இன்றி என்றவாறு.

‘இளமையு மவையல வில’ எனவே, அதற்கு மறுதலையாகிய முதுமையாயின் அவையலவிலவென்பதோர் வரையறைப்படுத்து இலக்கணங் கூறப்படாவென்பது கருத்து.

‘சொல்லுங்காலை’ என்றதனால், சொல்லாத இளமைப்பெயருங் கொள்க; அவை,

“நன்னாட் பூத்த நாகிள வேங்கை.”

(அகம். 85)

எனவும்,

“நாகிளவளை”

(புறம். 266)

எனவும்,

“கணைக்கோட்டு வாளைக் கமஞ்சூன் மடநாகு.”

(குறு. 164)

எனவும்,

“எருமை நல்லான் கருநாகு பெறூஉம்.”

(பெரும்பாண். 165)

எனவும் வரும். இவற்றுள் ஓரறிவுயிர் முதலாக ஐந்தறிவுயிரளவும் நாகென்னும் இளமைப்பெயர் வரையறையின்றிச் சென்றது; 2வண்டென்பதற்கும் ஒக்கும், 3அது விரவுப்பெயராகலின்.

(26)


1. இன்றி என்பது அன்றி என்றிருத்தல்வேண்டும்.

2. வண்டும் நாகு என்ற இளமைப்பெயர் பெறுமென்றபடி

3. அது விரவுப்பெயராகலின் என்றது நாகு என்றது ஐயறிவுயிர்க்கும் பொதுவாகலின் என்றபடி.