பக்கம் எண் :

பொருளதிகாரம்647

[ஏறென்னும் பெயர்க்குரியன இவை எனல்]

593. பன்றி புல்வா யுழையே கவரி
யென்றிவை நான்கு மேறெனற் குரிய.
(38)
594. எருமையு மரையும் 1பெற்றமு மன்ன.(39)
595.கடல்வாழ் சுறவு மேறெனப் படுமே.

இம்மூன்று சூத்திரத்தான் ஓதிய எட்டுச் சாதியின் ஆண்பாலும் ஏறெனப்படும் என்றவாறு.

“காற்றுச்சுவ டொற்றுக் கடிபுனங் கவரு
 மேற்றிளம் பன்றியி னிருளை வெரூஉம்.”

எனவும்,

“வெருளேறு பயிரு மாங்கண்.”

(அகம். 121)

எனவும்,

“பொரிமலர்ந் தன்ன பொறிய மடமான்
 திரிமருப் பேறொடு 2தேரறேர்க் கோட.”

(கலி. 13)

எனவும்,

“ஏற்றிளங் கவரி யெரியென வெருவப்
 பூத்த விலவத்துப் பொங்க ரேறி.”

எனவும்,

“ஏற்றெருமை நெஞ்சம் வடிம்பி னிடந்திட்டு.”

(கலி. 103)

எனவும்,

“வரிமரற் பாவை மரையேறு கறிக்கும்.”

எனவும்,

“புலம்பயி ரருந்த வண்ணனல் லேறு.”

(குறுந். 344)

எனவும்,

“சுறவே றெழுதிய மோதிரந் தொட்டாள்.”

(கலி. 84)

எனவும் வரும். பிறவும் அன்ன.

(40)

[போத்தென்னும் பெயர்க்குரியன இவை எனல்]

596.பெற்ற மெருமை புலிமரை புல்வாய்
மற்றிவை யெல்லாம் போத்தெனப் படுமே.
(41)
597. நீர்வாழ் சாதியு 3ளறுபிறப் புரிய.(42)

1. பெற்றம்--ஆ.

2. தேரல்தேர்--பேய்த்தேர் (கானற்சலம்).

3. “அது பெறற்குரிய” என்பது இளம்பூரணர் கொண்ட பாடம்.