| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 139 |
இக் குறிஞ்சிக்கலியுள், ‘தீரத்தறைந்த தலையும்’ ‘வைகாண் முதுபகட்டின்’ ‘முதுபார்ப்பான்’என வருதலால், இளமை தீர்ந்தான் ஒருவன் இணைவிழைச்சினை மேற்கொண்டான் என்பது புலனாகும். | (3) | தேறுத லொழிந்த காமத்து மிகுதிறம் பெருந்திணைக் குறிப்பாதற்குத், தன்னை விரும்பாப் பிறன் மனையாளைப் பெட்டொழுகும் பேதையான தென்னிலங்கை அரக்கன் காமக்கதை சாலும். இராவணன் தன் காமப் புரையுணர்ந்து தேறாமல் இறக்குமட்டும் உளத்ததனை வளர்த்த பெருந்திணைப் பெற்றியைக் காட்டும் கம்பர் பாட்டுமிங்குக் கருதற்குரியது. |
| “வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த | - திருமேனி மேலும் கீழும் | | எள்ளிருக்கு மிடனின்றி உயிரிருக்கு மிடனாடி யிழைத்தவாறோ? | | கள்ளிருக்கு மலர்க் கூந்தற் சானகியை மனச்சிறையிற் | கரந்த காதல் | உள்ளிருக்கு மெனக்கருதி உடல்புகுந்து தடவியதோ ஒருவன்வாளி. ” |
(4) மிக்ககாமத்து மிடல் பெருந்திணைக் குறிப்பாதற்குச் செய்யுள்: “என்றவ ளரசன்தன்னை நோக்கலள், இவன் கணார்வஞ் சென்றமை குறிப்பிற்றேறிக், கூத்தெலா மிறந்தபின்றை நின்றது மனத்திற்செற்றம், நீங்கித்தன் கோயில்புக்கான் மன்றல மடந்தை தன்னை வலிதிற்கொண்
டொலிகொடா ரான். ” (சிந்தா. 685. காந். ) “தேனுடைந் தொழுகுஞ் செவ்வித் தாமரைப் போதுபுல்லி, ஊனுடை உருவக் காக்கை இதழுகக் குடைந்திட் டாங்கு, கானுடை மாலைதன்னைக் கட்டியங் காரன் சூழ்ந்து தானுடை முல்லை யெல்லாம் தாதுகப்
பறித்திட் டானே. ” (சிந்தா. 686. காந்) |