| 170 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
மேற்கோள் என்பாருளர். அப்பாட்டுக்கள் குறுநில மன்னரைப் பற்றியவை. ‘மன்பெறு மரபின் ஏனோ’ ராகிய குறுமன்னருக்கு ‘வேந்துவினை யியற்கை வேந்தனின் ஒரீஇய(அவ்) வேனோர் மருங்கினும் எய்திடனுடைத்து’ எனத் தொல்காப்பியரே கூறுகிறார். எனவே, இன்னோரைப் பாராட்டும் வெட்சிப்பாடாண்புறப்பாட்டுக்கள், ஒரு வகையாய் மன்னராவார்க்கு உறுதொழிலே கூறுவனவாம்; வேந்தன் பணிப்பின்றியும் மக்களில் யாரும் தன்னுறு தொழிலாக நிரைகவரும் தவறுக்கு இப்பாட்டுக்கள் மேற்கோளாகாமை வெளிப்படை. | சூத்திரம் : 3 | | | | படையியங் கரவம், பாக்கத்து விரிச்சி, புடைகெடப் போகிய செலவே, புடைகெட வொற்றி னாகிய வேயே, வேய்ப்புற முற்றி னாகிய புறத்திறை, முற்றிய ஊர்கொலை, ஆகோள், பூசன் மாற்றே, நோயின் றுய்த்தல், நுவல்வழித் தோற்றம், தந்துநிறை, பாதீடு, உண்டாட்டு, கொடையென வந்த வீரேழ் வகையிற் றாகும். |
கருத்து : இது, முதற் சூத்திர விறுதியில் ‘வெட்சி தானே உட்குவரத் தோன்று மீரேழ் துறைத்தே’ எனத் தொகுத்தோதிய துறைகளின் வகையும் பெயரும் விளக்குவதாகும். பொருள் : படையியங் கரவம் = நிரைகவரப் படை நடக்கும் ஆர்ப்பு; “வெவ்வாண் மறவர் மிலைச்சிய வெட்சியாற் செவ்வானஞ் செல்வதுபோற் செல்கின்றா - ரெவ்வாயு மார்க்குங் கழலொலி யாங்கட் படாலியரோ போர்க்குத் துடியொடு புக்கு. ”
(பெரும்பொருள் விளக்கம் : புறத்திரட்டு, 1236) பாக்கத்து விரிச்சி = செல்லும் பக்கத்தே புள்வாய் நற்சொல்லின் குறிப்பறிதல். (விரிச்சி - புள்ளொலியால் நல்லதறிதல்) “மன்னவன் னிரைவந்து கண்ணுறு மின்ன நாளினாற் கோடு நாமெனச் |