| தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை | 21 |
“வைகுபுலர் விடியல் வைபெயர்த் தாட்டி” எனவும், “வைகுபுலர் விடியல் மைபுலம் பரப்ப” எனவும் முறையே இரவுபுலர்ந்து கதிர்விரியும் விடியர்காலம் இனிது விளக்கப்பெற்றும், 42ஆவது பாட்டில் “பெரும்பெயல் பொழிந்த ஏமவைகறை” எனவும், 308ஆவது பாட்டில் “. . . . . . . . . . . . . கங்குல். . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ஆலி யழிதுளி பொழிந்த வைகறை” எனவும் வைகறை விளக்கப்பெற்று மிருக்கிறது. இன்னும், இரவிருள் கழிந்து பகலொளியெழுந்து படரும் புலரியே ‘விடியல்’ என்பதும், இருளற வொழியாத இரவினிறுதியே ‘வைகறை’ என்பதும் பல பழம் பாட்டுக்களால் விளக்கமாகும். “பெரும்புலர்விடியல்” (குறுந். 224) (நற். 60), “தண்புலர் விடியல்” (60), “வைகுபுலர் விடியல்” (12) எனப் பலவிடத்தும் புலரும் பொழுதே விடியல் என உரைக்கப்படுதலால், இரவிருள் புலர்ந்து பகலொளியலர்ந்த நாட் காலையே விடியல் என விளங்குகிறது. புலரி, வைகல், விடியல், என்பன நாட்காலை எனும் ஒரு பொருள் குறிக்கும் பல பெயர்களாகப் பயிலுதலுமிதனை வலியுறுத்தும். இனி, வைகறை இருள்கழியாத இரவினிறுதியென்பது விளங்க, “வைகுறுமீனின் இனையத்தோன்றி” (நற். 48) என மீனொளி மறையாத இருள் தங்கும் வான்சிறப்புடைய வைகறை என வருதலானுமறிக. “குக்கூ என்றது கோழி, அதனெதிர் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தோள்தோய் காதலர்ப் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே” (குறுந். 157) என்பதில், வைகறை தலைக்கோழி கூவும் விடியாப் பொழுதென விளக்கப்படுதலும் காண்க. சிவஞான முனிவர் எடுத்துக்காட்டும் முருகாற்றுப்படையடிகளும், அவர் கொள்ளும் பொருளில், வைகறையும் விடியலுமொன்றெனற்குமாறாக அவை இருவேறு பொழுதுகளெனவே விளங்குகின்றன. “முட்டாட் டாமரைத் துஞ்சி, வைகறை கட்கமழ் நெய்த லூதி, எற்படக் கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர் |