| 270 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
“. . . . . . . . . . . . . . . . . . . சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ! மாகஞ் சுடர மாவிசும் புகக்கும் ஞாயிறு போல விளங்குதி பன்னாள்; ” - பதிற்றுப்பத்து. 88 எனவருவது ஒழுகுவண்ணச் செந்துறைப்பாடாண், “நல்லிசைச் சேயிழை கணவ” என்றதனால் புரைதீர் காமம் புல்லிய பாடாணாயிற்று. இதுவே போல, “மீன்வயினிற்ப” எனும் (90ஆம்) பாட்டிலும் புரைதீர்காமம் புல்லிய பாடாண் வருதலறிக. அது வருமாறு: “. . . . . . . . . . . . . . . . . . வளங்கெழு குடைச்சூ லடங்கிய கொள்கை ஆறிய கற்பிற் றேறிய நல்லிசை வண்டார் கூந்தல் ஒண்டொடி கணவ! நின்னாள் திங்க ளனைய வாகத் திங்கள் யாண்டோ ரனைய வாக; யாண்டே ஊழி யனைய வாக; ஊழி வெள்ள வரம்பின வாகென வுள்ளிக் காண்கு வந்திசின் யானே, செருமிக் குருமென முழங்கு முரசிற் பெருநல் யானை யிறைகிழ வோயே. ” - பதிற்று. 90 | சூத்திரம் : 27 | | | | வழங்கியன் மருங்கின் வகைபட நிலைஇப் பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும், முன்னோர் கூறிய குறிப்பினும், செந்துறை வண்ணப் பகுதி வரைவின் றாங்கே. |
கருத்து : இது, சில பாடாண் துறைகளில் இயற்பாவிடத்துப் பயிலும் இசைப்பா வகை கூறுகிறது. பொருள் : வழங்கியன் மருங்கில் = பல பிறதிணைப் பகுதிகள் பாடாணாய்ப் பயிலுமிடத்து; வகைபட நிலைஇ = அதனதன் கூறுபட நின்று; பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும் = வாழ்த்தலும் புகழ்தலும் நுதலுமிடத்தும்; முன்னோர் |