பக்கம் எண் :

தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை397

‘காமம்’ என்பற்கு அன்பென்றே நச்சினார்க்கினியர் பொருள் கொள்ளுதலுமறிக. இவ்வியலில் தலைவனைக் காமக்கிழவனெனக் கூறுதலும் இதனை வலியுறுத்தும். ஆசை குறிக்கும் காமச்சொல்லை, வடநூலார் காதலின்பத்துக்கு வழங்குதல் இலக்கணை. அதனாலிங்குக் ‘காமக்கூட்டம்’ என்றது, அறத்தொடுபட்ட அன்புத்திணைக் கூட்டத்தைக் குறிப்பது தெளிவாம்.

இனி, வடவர் உவந்துழிக்கூடி உவந்துழிப்பிரியும் கந்தருவக் கூட்டம், பிரிவறுபெட்பா லுயிரொன்றிக்கூடி, மணமாய்மலர்ந்து மனைமாண்பு வளர்க்கும் தமிழரின் களவறக்காதலை ஒவ்வாதாதலின் “காமக்கூட்டம் யாழ்த்துணைமையோர் மணமாம்” என்றார்; காதல் மீதூரக் கலந்து மகிழ் கந்தருவர்கூட்டம், நீளாது நிலையாது உலகறிய மணந்து நிலவாதொழியினும் காதலால் நேர்தலால், காதல் வேண்டாத ஆரியர் பிறவகைக் கூட்டமேழையும் விலக்கி, களவுக்கூட்டம் காதலளவில் கந்தருவர் புணர்ச்சியை ஓரள வொக்குமெனுங் குறிப்பால், தமிழர் களவுத்திணை அன்புக்கூட்டம், காதலொடுகூடுங் கந்தருவர் கூட்டத்தியல்பே என்று கூறப்பட்டது. ‘மறையோர்’ என்றது, வேதமோதும் ஆரியரை. ‘தேம்’ என்பது. இடப் பொருளுருபு. அதனைத் ‘தேயத்தின்’ மரூஉவாக்குதல் பொருந்து பொருளுதவாது.

மன்றல், மணம், என்றசொற்கள், இங்குக் கூட்டம் குறிக்கும். கரணமொடு மணப்பது, நூல்களில் வரைதல் அல்லது வரைவென வழங்கும்.

களவிலக்கணத்தை விளக்குவதோடமையாது, தமிழ் நூலில் ஆரியர் எட்டுக் கூட்டங்களை இழித்துப் பேசுவதேன்?எனில், தொல்காப்பியர் காலத்துக்கு முன்னமே ஆரியப்பார்ப்பனர், தமிழ்நாடு புகுந்து இடம்பெற்றுத் தங்கித் தம் வடகலையை வளர்க்கத் துடங்கியதால், அக்காலத்தவர் மொழிப் பேரிலக்கணமான ஐந்திரமும் பிறநூலும் ஆராய்ந்து, அவற்றின் வேறுபட்ட தமிழ் மரபுகளைத் தமிழரொடு அவ்வாரியப் புலவருக்கும் விளக்கவேண்டி, இரு கலை மரபு வேறுபாடுகளை இடையிடைக் குறிப்பாராயினர்; அவற்றுள் இம் மணமரபு வேற்றுமை பெரிதாதலின், அதையிங்குச் சுட்டினர். காதலையிகழ்ந்து, மக்களைப்பெற்றுத் தம்மினம் பெருக்குவதே ஆரியமணத்தின் அடிநோக்கம்; கன்றிய காதலால் ஒன்றியறம்