தக்கிணாக்கினி முச்சதுரமானது 61
தக்கிருக்கின்ற 106
தக்கிருக்கும் அடி, 105
தங்கிருக்கும்படி 70
தக்கோலக்காய் 20
தக்கோலம் 63
தகடாகத் தட்டின கஞ்சதாளம் 604
தகடு-இதழ்,பூவின் புறவிதழ் 5,37,193,232,233,441
தகடுகளை ஆணிகளாலே தைத்தல் 457
தகர்-ஆட்டுக்கிடாய்,கிடாய்,மேட்டுநிலம் 65,184,219,545,597,646,654
தகர்விரவு துருவை 592
தகர்வென்றி 537
தகரம்-மயிர்ச்சந்தனம்,மயிர்ச்சாந்து 450,472,494
தகரன் 22
தகளி-அகல் 284,449,455
தகளி விளக்கு 284
தகை-அழகு,மாலை 16,54,165,240,382,403,486
தகைசூழாகம் 16
தகைதல்-உள்ளே அடக்குதல் 535
தகைப்பு-கட்டணம் 521,545
தகைபெறவலந்த தழல் 468
தகைமாண் காடி 199
தகைமாண்குடுமி 207
தகைமுற்றம் 517
தகைமைப்பாடு 504
தகையோன்-அழகையுடையோன் 165
தங்கல்-தாழ்த்தல்,நிலைபெறுதல் 120
தங்கை 143,168
தச்சச்சாதி 235
தச்சச் சிறாஅர் 195
தச்சர் (தச்சன்) 452,453,457
தசநான்கெய்திய பணைமருணோன்றாள் 440
தசும்பு-குடம்,மிடா 50,651
தசை (தசைகள்) 243,360,427,549
தசையினைப்பொரிக்கும்-ஆரவாரம் 549
தட்கும்-தங்கும் 297,353
தட்ட-தடுத்த 416
தட்டம்-கச்சு 441,457
தட்டார் 396
தட்டுக்களிற் பூக்களை வைத்தல் 381
தட்டுப்பிழா-ஒருவகைப் பாத்திரம் 237
தட்டை-கரடிகைப்பறை,கிளிகடி கருவி,தட்டைப்பறை 309,370,468,469,565,586,605,639
தட்டைபுடையுநர் 586
தட்டோடு 243
தட-பெருமை,வளைவு 8,33,56,68,105,120,131,158,218,463
தடக்கை-பெருமையையுடையகை,வளைவினையுடைய கை 3,18,56,66,73,135,138,139,157,159,206,263,327,333,473,611
தடவிற் செந்நெருப்பு 437
தடவு-தூபமூட்டி 451
தடவுநிலைப்பலவின் முழுமுதல் 184
தடாரி-உடுக்கை 88
தடாரிப்பொருநர் 349
தடாரியிலிருந்த கசடுக்குப் பாம்பின் துத்தி 88
தடாரியை வாசித்தல் 107
தடி-ஊன்,தசை,தண்டு 201,227,243,577,593,601,624,647,650,651,659
தடிதல்-வெட்டுதல் 7
தடிந்து-அறுத்து 549
தடைஇ-தடவி 437,451
தடைஇய-திரண்ட 460
தடைஇயதோள் 442
தடையா-தடைசெய்யாத 88
தண்கடல் வரைப்பு 181
தண்கடனாடன் 323
தண்கமழலரிறால் 31
தண்கயக் குவளை 470
தண்டண்டலை 97
தண்டத்தலைவர் 429
தண்டத்தலைவர் அரசனேவலாற் செல்லல் 377
தண்டல்-அமைதல் 340
தண்டலை-சோலை,பூந்தோட்டம் 121,311,374,533
தண்டலையுழவர் 201
தண்டனிடல் 71
தண்டா-அமையாத 289,340
தண்டாது-அமையாமல் 293,346
தண்டாமலீவது 207
தண்டாவளம்-அமையாத செல்வம் 340
தண்டாவீகைத்தகைமாண் குடுமி 207
தண்டானாகியகோரை 232
தண்டி-பலகாலலைத்து 91,112
தண்டினர் தரீஇ-அலைத்தனராய் நலிந்து தின்னச்செய்து 593,647
தண்டினையுடைய தாமரை 167
தண்டினையுடைய யாழ் 451
தண்டு-தடி,வீணைத்தண்டு 167,172,191,211,222,227,245,247,451
தண்டுகளையுடைய அறுகு 557
தண்டு காலாக ஊன்றி 589
தண்டைக்கால் 81
தண்ணளிசெய்தல் 126
தண்ணறுங்கழுநீர் 325
தண்ணறுங்கானம் 3
தண்ணறுந்தகரம் 437,472
தண்ணறுந்தொடையல் 473
தண்ணிய பண்டம்-இழிந்த பண்டம் 548
தண்ணிழல் வாழ்க்கை 524
தண்ணீர் அரியகாலத்தே வந்து பயன்றருதல் 611
தண்ணுமை-பறை 189,595,652
தண்பணியம் 522
தண்பணை 97,135,143,157,195,234,299,307,355,366,556
தண்பணை தழீஇய தளராவிருக்கை 97,135,195
தண்பணைநாடு 594,612
தண்பணையெடுப்பி 526
தண்மீன் சூடு 197
தண்வைப்பு 100
தணக்கம்பூ 471,491
தணக்கு 103
தணப்ப-போக 467,483
தணிமார்-ஆற்றுதற்கு 584,636
தத்தம் சிறுதொழிலையன்றி வேறுகல்லாத இளைஞர் 112
தத்தி-கடந்து 627
தத்துநீர்வரைப்பு 155
தத்துவங்கடந்த பொருள் 79
தத்துவங்கள் 50
தத்துவங்களை ஆராய்தல் 428
தத்துற்று-தத்துதலையுற்று 31,77
ததர்-கொத்து,செறிதல் 176
ததர்பிணி 148
ததைந்த-நெருங்கின 366
ததைந்த கோதை 307
தந்தத்தாற்சமைத்த கட்டிலைச்சூழ முத்துவடம் நாற்றல் 457
தந்திரகரணம் 414
தந்தொழில் முடிமார் 12
தப்பல்-கொல்லுதல் 214
தப்பா 182
தப்பும் 480
தப-அறும்படி,கெட 194,234,404
தபு 269,283
தபுதல்-கெடுதல் 609
தம்-தாரும் 112
தம்தொழிலையன்றி வேறு கல்லாத இளைஞர் 153
தம்பி 344
தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் 600
தம்மின் - கொணர்மின் 334,335,424
தம்முடம் பிடாஅது 90
தம்முடனே எதிர்ந்தார்வலியிற்பாதி தங்கள் வலியிலே கூடும்படி அசுரர் சாதித்தமாமரம் 42
தமவும் பிறவும் ஒப்பநாடி 524
தமனியப் பொற்சிலம்பு 200
தமனியம் 141,163,332,420
தமியேம் 561
தமிழ்நாடு 342
தமிழ்நிலைபெற்ற மதுரை 134,156
தமிழ்முருகன் 80
தமிழ்வீற்றிருந்த மதுரை 156
தமிழறிவித்தல் 512
தமிழாராய்ந்த சிறப்பு 343
தமிழுக்கு மல்லிகைமாலை 433
தயக்கற-துளக்கமற 495
தயங்கு 473
தயங்குதல்-அசைதல் 387
தயிர் 599,616,656
தயிர் கடையுங் குரலுக்குப் புலிக்குரல் 190
தயிர்ப்பிதிர்வு, 616
தயிரின் புடைப்பிற்கு ஆம்பிமுகை 190,226
தரத்தர 92
தரத்தரமிகாது 318
தரம் அறிந்து கொடுத்தல் 92,171
தராய்-மேட்டுநிலம் 651
தராய்க்கண்வைத்தபோர் 595
தரீஇ 147,148,176,209,303,361,569,593,612,647
தருக்கங்கள் 398
தருக்கங்கூறுவோன் கைவிரலின் நிலை 617
தருநர் (தருநன்) 126,324
தருப்பை (தருப்பைப்புல்) 71,236
தருப்பைவேய்ந்த குரம்பை 196
தரும்பரிசில் 154
தருமணல்-கொண்டு வந்திட்ட மணல் 417
தருமணன் ஞெமிரியமுற்றம் 439
தருமணன் முற்றம் 331
தருமத்தின் வழி 391
தருமத்தோடு கூடிய வழி 125
தருமநூல் 394
தருமம் 341,394
தருமன் முதலியோர் 251
தருவனர் 592
தரூஉ 323
தரூஉம் 183,199,202,437,451,576
தலை-இடம் 83,101,359,363,550,643,644
தலை ஆண்மகன்றலையும் உடல் புள்ளின் வடிவுமாக எழுதின கொடி 68
தலைஇ 199
தலைஇய-தழைத்த,பெய்த 3,34,564,604
தலைக்கை 23
தலைக்கொடி 67
தலைக்கோல் 589
தலைக்கோலம் 37,248
தலைக்கோள் வேட்டம் 97,117
தலைகளேந்தின கொம்பு 357
தலைச்சங்கத்தில் அகத்தியருடன் பாண்டியனிருந்து தமிழாராய்ந்தது 43
தலைச் சென்று 97,303,346,357,361
தலைத்தந்து-முதற்கை கொடுத்து 3
தலைநாட் செருந்தி 41
தலைநாட்பூத்த வேங்கை 84,636
தலைநாள்-இளவேனிற் காலந்தொடங்குகின்ற நாள்,முதல்நாள் 63,64,636
தலைநாளன்ன புகல் 601
தலைப்பாகை 280
தலைப்பாடு-எதிர்ப்படுதல் 481
தலைப்பாடு கூறல் 485
தலைப்பெயல்-கார்காலத்து முதற்பெயல் 3,34
தலைப்பெயல் தலைஇயகானம் 3
தலைபெயர்க்கும் 84
தலைமயிரினையுடைய சேணமிட்ட படுக்கை 647
தலைமயிருக்கு அகிற் புகையை ஊட்டுதல் 494
தலைமயிரை விரலால் அலைத்து உலர்த்துதல் 494
தலைமாறி இருத்தல் 450
தலைமுதல்அடியீறு-கேசாதிபாதம் 106
தலைமை வாய்ந்த ஆண்யானையை யானைத்தலைவனென்றல் மரவு 638
தலையாட்டத்தையுடைய குதிரை 158
தலையாட்டம்-குதிரைத் தலையிலணியும் கவரி 119,158,213,241
தலையாட்டம் பொங்க 119
தலையாத்த 185
தலையாப்புப் பரந்த அடிசில் 258
தலையாயவோத்து 390
தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியன் மண்ணசையாற் சென்று பொருதது 465
தலையாலங்கானத்துச்செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் 351,352,433
தலையாலங்கானம் 351
தலையிலுள்ள ஈரத்தை விரலால் உளர்ந்து புலர்த்துதல் 472
தலையிலே முடிந்த நாணையுடைய வில் 223
தலையிற்சூடுமாலை 64
தலையிறும்பு 592
தலையும்-பெய்யும் 630
தலையைப் பேய்கள் அடுப்பாகக் கோடல் 341
தலைவர் 18,264
தலைவராயினார்க்குப் பொற்கலம் பரப்புதல் 259
தலைவலித்தியாத்த தூண்டில் 197
தலைவற்குக் கலைகள் நிறைந்திருந்தமைபற்றி மதி 172
தலைவன் களிறுகாத்தவாறு 476
தலைவன் குணங்கள் 484,508,509
தலைவன் தலைவியின் தோளில் துயிலல் 480
தலைவன் தலைவியின் முன்கை பற்றிச் சூளுறுதல் 479
தலைவன் தலைவியை ஆற்றுவித்துப் பின்பு பிரியக் கருதுதல் 563
தலைவன் தலைவியை நுதல் நீவல் 476
தலைவன் (பாண்) தாமரைமலைதல் 601
தலைவன் நாய்காத்தவாறு 474
தலைவன் பகையைக் கடிதலுக்கு ஞாயிறு இருளைக் கெடுத்தல் 614
தலைவன் புனலினின்றும் எடுத்தவாறு 476
தலைவன் போக்கிற்கு ஒருப்படாமல் நிற்கும் குறிப்பு 554
தலைவனது மலையைப்பாடுதல் 161
தலைவனுக்கு ஏறு 479
தலைவனுக்குக் களிறு 474
தலைவனுக்குச் சூரியன் 614
தலைவனுக்கு மதி 47
தலைவனைப் பிரிந்த தலைவிக்கு மயில் 480
தலைவனைப் பிரிந்த தலைவியின் நிலை 459,460
தலைவனைப் பிரிந்திருந்துவருந்துந் தலைவி 444
தலைவாசல் 559,656
தலைவாய்-வாய்த்தலை 595,652
தலைவாயில் 169
தலைவிக்கு மஞ்ஞை 269
தலைவி கூற்று 485
தலைவியின் அழுங்கண்ணிற்கு நீரெறிந்த மலர் 509
தலைவியின் குணங்கள் 484
தலைவியின் தோள் தண்ணிய 530
தலைவியின் வருத்தமிகுதி தீர வேண்டிக் கொற்றவையைப் பரவுகின்றவள் கூற்று 463
தலைவியைக் கண்ட தலைவனுக்கு ஆகாண்விடை 473
தலைவியை வற்புறுத்துஞ் செவிலியர் புனைந்துரைத்து நகுவித்துப் பொழுது போக்குதல் 442
தவ்வென்பது குறிப்புமொழி 444
தவ்வென்றசைஇ 444
தவ்வென்னுமோசை 646
தவ-மிக 356,589,643
தவஞ்செய்மாக்கள் 90
தவத்தால் மெய்வருத்தம் உளதாதல் 54
தவத்திற்குக் கொடிகட்டல் 378
தவப்பல 589,590,591,643,644,645
தவப்பள்ளி 517
தவழ்கற்றல் 93
தவா-கெடாத 360
தவாஅ 181
தவாப்பெருக்கம் 303
தவிர்ச்சி 287
தவிர்த்த-ஒழித்த 640
தவிர்வில் வேட்கையேம் 470
தழங்குகுரல் 416,637
தழல்-கிளி முதலியவற்றை ஓட்டுங்கருவி 468,487
தழல் முதலியவற்றாற் கிளிகடிதல் 468
தழலும் தட்டையும் 469
தழால்-தழுவுதல் 572,616
தழிச்சிய 183
தழிஞ்சி 444
தழீஇ-தழுவி 23,29,31,76,77,135,153,156,180,195,305,309,316,320,325,369,382,390,402,443,464
தழீஇய-சூழ்ந்த 97,157,187,195,265,277,311,374,599,656
தழும்பு 161,227,460
தழூஉ-குரவை,தழுவி 299,311,328,355,373,410
தழூஉப்பிணையூஉ நின்றகுரவை 328
தழை-ஒருவகைஉடை 21,64,225
தழையாலே வேய்ந்த கூரை 277
தழையை உடுத்தல் 493
தழையைக்கட்டின யாழ்க்கொம்பு 604
தழைவிரவின கண்ணி 370
தழைவிரவினமாலை 216,448
தளர்க்கும்-ஓடப்பண்ணும்,கெடுக்கும் 580,627,628,643
தளர்நடை வருத்தம் 195
தளராத-அசையாத 234
தளராவிருக்கை 97,135,157,195
தளவம்-செம்முல்லைப்பூ 471,490
தளவு-முல்லை விசேடம் 98,124
தளி-துளி 366,531,644
தளிபொழிகானம் 590
தளிமழை 307
தளியுணவிற்புள் 513
தளிர்களை அப்புதல் 6
தளிர்ப்புறத்து ஈர்க்கின் அரும்பிய திதலை 333
தளிர் விரவின மாலை 177
தளிராற்செய்தமாலை 117
தளிரேர்மேனி 442
தளிரை மேய்ந்து வளர்ந்தகுரங்கு 637
தளிரொடு மிடைந்தகண்ணி 593
தளையவிழ் தெரியல் 141,165
தளையவிழ்ந்த பூக்கள் 415
தறி (தறிகள்) - முளை,முளைக்கோல்,யானைத்தம்பம் 189,225,234,379,450
தறியினையுடைய அம்பலம் 557
தறுகண்-கடுகக்கொல்லுதல் 163
தறுகண்மை 222,464
தன்முன் 147
தன்றெறல் வாழ்க்கை 597
தன்னறியளவை 92
தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல் 621
தன்னும்பாடி 139
தன்னை நுகர்வாரை வேறொன்றை நுகராமற்றடுத்த தினைப்பிண்டி 649
தன்னையொழிந்தபூதங்கள் விரிதற்குக் காரணமாகிய ஆகாயம் 366
தன்னைவெறுத்தல் 153
தனக்கென்று ஒரு பொருளும் பேணாத நன்னன் 645
தனக்கென்று ஒன்றும் வரைந்து வையாமற் கொடுத்தல் 172
தனக்கென்று பாதுகாவாது கொடுத்தல் 354
தனிச்சேவகம் 422
தனிவேல் 81