| மணிநிரைத் தன்ன வனப்பின் வாயமைத்து வயிறுசேர் பொழுகிய வகையமை யகளத்துக் | 225 | கானக் குமிழின் கனிநிறங் கடுப்பப் புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு தேம்பெய் தமிழ்துபொதிந் திலிற்று மடங்குபுரி நரம்பிற் பாடுதுறை முற்றிய பயன்றெரி கேள்விக் கூடுகொ ளின்னியங் குரல்குர லாக | 230 | நூனெறி மரபிற் பண்ணி யானாது முதுவோர்க்கு முகிழ்த்த கையினை யெனவு மிளையோர்க்கு மலர்ந்த மார்பினை யெனவு மேரோர்க்கு நிழன்ற கோலினை யெனவுந் தேரோர்க் கழன்ற வேலினை யெனவு | 235 | நீசில மொழியா வளவை மாசில் காம்புசொலித் தன்ன வறுவை யுடீஇப் பாம்புவெகுண் டன்ன தேற னல்கிக் |
227."ஆசில் பாட லமிழ்துறழ் நல்யாழ்"(பெருங். 1. 37 : 150) இலிற்றும்; புறநா. 68 : 8. 226 - 7."தீந்தே, னணிபெற வொழுகி யன்ன வமிழ்துறழ் நரம்பி னல்யாழ்"(சீவக. 722) 228."பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே"(புறநா. 21 : 11); பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தன்"(சிலப். 27 : 46) 229.இயம்-யாழ்: "இயம்வெளிப் படுத்தபி னிசை வெளிப் படீஇய"(பெருங். 1. 37 : 118) 232."வணங்குசிலை பொருதநின் மணங்கம ழகல, மகளிர்க் கல்லது மலர்ப்பறி யலையே"(பதிற். 63 : 4 - 5), "மகளிர் மலைத்த லல்லது மள்ளர், மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப"(புறநா. 10 : 9 - 10); "சோலைமயி லார்கடுணை வெம்முலைக டுஞ்சும், கோலவரை மார்பு"(சீவக. 283) 233.‘நிழன்று-நிழல் செய்து' என்பதற்கு இவ்வடி மேற்கோள்; சீவக. 1270, ந. 231 - 4.துதியால் நீதியைப் புகட்டல்: புறநா. 10. 235.நீசில மொழியாவளவை: "குறித்தது மொழியா வளவையின்"(முருகு. 281) 236புறநா. 383 : 9 - 11. 237."பாப்புக்கடுப் பன்ன தோப்பி" (அகநா. 348 : 7); அரவுவெகுண் டன்ன தேறலொடு " (புறநா. 376 : 14); "நச்சரா வெயிறுகதுவிய தனைய கடுநற"(குலோத். பிள்ளைத்.)
|