18

பத்துப்பாட்டு

155நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல் 
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்
தீரிரன் டேந்திய மருப்பி னெழினடைத்
தாழ்பெருந் தடக்கை யுயர்த்த யானை
யெருத்த மேறிய திருக்கிளர் செல்வனு
160நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய
வுலகங் காக்கு மொன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவருந் தலைவ ராக
வேமுறு ஞாலந் தன்னிற் றோன்றித்
தாமரை பயந்த தாவி லூழி
165நான்முக வொருவற் சுட்டிக் காண்வரப்
பகலிற் றோன்று மிகலில் காட்சி
நால்வே றியக்கைப் பதினொரு மூவரொ
டொன்பதிற் றிரட்டி யுயர்நிலை பெறீஇயர்
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
170வளிகிளிர்ந் தன்ன செலவினர் வளியிடைத்
தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட
வுருமிடித் தன்ன குரலினர் விழுமிய
வுறுகுறை மருங்கிற்றம் பெறுமுறை கொண்மா
ரந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்

"‘இமையா ............. செல்வனும்' திருமுருகாற்றுப்படை; இமைத்தகண விழித்ததுபோல விழிக்க வெனச் சொல்லியது : விழித்தலாவது பிரச்சுவலித்தல்" (தக்க. 334, உரை)

164-5. "நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த், தாமரைப் பொகுட்டின்" (பெரும்பாண். 403-4)

167. நால்வே றியற்கைப் பதினொரு மூவர் : "நாலெண் டேவரு நயந்துநிற் பாடுவோர்" (பரி. 3 : 28)

167-8. "நால்வகைத் தேவரு மூவறு கணங்களும்" (சிலப். 5 : 176)

169. "மீன்பூத் தன்ன வான்கலம்" (பெரும்பாண். 477)

170-71. வளியிடைத் தீயெழுந்தன்ன திறல்: கான்முளை, யெரிநிகழ்ந் தன்ன நிறையருஞ் சீற்றம்" (பதிற். "இருங்கண்"); "வளித் தலைஇய தீயும்" (புறநா. 2 : 4)

173. உருமிடித்தன்ன குரலினர்: "இடியன்ன பெருங்குரலாள்" (தகடூர்.)