| நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த் தாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றிச் | 405 | சுடும ணோங்கிய நெடுநகர் வரைப்பின் இழுமென் புள்ளி னீண்டுகிளைத் தொழுதிக் கொழுமென் சினைய கோளி யுள்ளும் பழமீக் கூறும் பலாஅப் போலப் புலவுக் கடலுடுத்த வானஞ் சூடிய | 410 | மலர்தலை யுலகத் துள்ளும் பலர்தொழ விழவுமேம் பட்ட பழவிறன் மூதூர் அவ்வாய் வளர்பிறைச் சூடிச் செவ்வாய் அந்தி வானத் தாடுமழை கடுப்ப வெண்கோட் டிரும்பிணங் குருதி யீர்ப்ப | 415 | ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தவியப் பேரமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தேர் ஆரா செருவி னைவர் போல அடங்காத் தானையோ டுடன்றுமேல் வந்த ஒன்னாத் தெவ்வ ருலைவிடத் தார்த்துக் |
402-4. முருகு. 164-5. 405. (பி-ம்.) ‘நெடுமதில் வரைப்பு' சுடும ணோங்கிய வரைப்பு: "சுடும ணோக்கிய நெடுநிலை மனை" (மணி. 3:127);"சுடும ணெடுமதில்" (பு. வெ. 113) சுடுமண்: சிலப். 14:146; மணி. 18:33. 402-5. "மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப், பூவொடு புரையுஞ் சீரூர் பூவி, னிதழகத் தனைய தெருவ மிதழகத், தரும் பொகுட் டனையதே யண்ணல் கோயில்" (பரிபாடல், தி . 7); இராசகிரிய நகரத்தைத் தாமரை மலராகவும் அந்நகரின் உறுப்புக்களை அம்மலரின் உறுப்புக்களாகவும் பெருங்கதை (3. 3: 50-114)யிற் கூறியிருத்தல் இங்கே அறிந்து மகிழத்தக்கது. 407. (பி-ம்.) ‘சினைஇய' 407-8. "கோளிப் பாகற் கொழுங்கனித் திரள்காய்" (சிலப்.16:24) 415. "ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழிய" (புறநா. 2:15) 416. கொடுஞ்சி நெடுந்தேர்:பொருந. 163; மதுரைக். 752. 419. "ஒன்னாத் தெவ்வருலைவிடத்தொழித்த"(பெரும்பாண்.416);தார்த்தென" (மலைபடு. 386)
|