இதனால் 1நண்பகலும் வேனிலுமாகிய பாலைநிலம்கூறி அதனைக் கலந்த நிலமும் கூறினார். இனி நீங்கள் அருஞ்சுரத்தைக்கடந்த பின்னரென்றுஉரைப்பர். 117-8. [பருந்துபட, ஒன்னாத் தெவ்வர் நடுங்க வோச்சி:] ஒன்னா தெவ்வர் நடுங்க பருந்து பட ஓச்சி-பொருந்தாத பகைவர் அஞ்சப்பருந்துகள் படியக் குத்தி, 119-20. வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம் வடி மணி பலகையொடு நிரைஇ - கூர்மையையுடைய முனை மழுங்கின புலால் நாறும் வாயையுடைய வேலை வடித்த மணி கட்டின பலகைகளோடே நிரைத்து வைத்து, 120-21. முடி நாண் சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர்-தலையிலே முடிந்த நாணையுடைய வில்லைச் சார்த்திவைத்த அம்புத்தங்கும் அகற்சியையுடைய வீடுகளையும், 122. ஊகம் வேய்ந்த உயர் நிலைவரைப்பின்-ஊகம் புல்லாலே வேய்ந்த உயர்ந்த நிலைமையினையுடைய மதிலையும், 123-4. வரை தேன் புரையும் கவை கடைபுதையொடு கடு துடி தூங்கும் கணை கால் பந்தர்-மலையில் தேனிறாலையொக்கும் குதையினையுடைத்தாகிய அடியினையுடையஅம்புக்கட்டுகளுடனே ஓசை கடிய துடியும் தூங்கும் திரண்ட காலையுடைய பந்தரினையும், 125. தொடர் நாய் யாத்த துன் அருகடி நகர்-சங்கிலிகளாலே நாய்களைக் கட்டிவைத்த கிட்டுதற்கரிய காவலையுடைய வீட்டினையும், 126. [வாழ்முள் வேலிச் சூழ்மிளைப்படப்பை:] முள் வாழ் வேலி சூழ் மிளை படப்பை -முள்ளையுடைய வாழ்வேலியினையும் அதனைச் சூழ்ந்த காவற்காட்டினையுடைத்தாகிய பக்கத்தினையும், 127. கொடு நுகம் தழீஇய புதவின் -கொடிய கணையமரம் ஏறட்ட உட்கதவையுடைய வாயிலினையும், 127 -8. செ நிலை நெடு நுதி வய கழுநிரைத்த வாயில் - செவ்விய நிலையினையும் நெடிய முனையினையுமுடைய வலியையுடைய கழுக்கள் நிரைத்த ஊர்வாசலினையுமுடைய, பகைவரைக் குத்துதற்குக் கழு வைத்தார். 129. கொடு வில் எயின் குறும்பில் சேப்பின்-கொடிய வில்லையுடைய எயினச்சாதியிலுள்ளாருடைய அரணிலே தங்கின், கணைதுஞ்சு வியனகர் (121)முதலியவற்றையுடைய குறும்பென்க, 130-131. களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ன சுவல் விளை நெல்லின் செ அவிழ் சொன்றி-களர்நிலத்தே வளர்ந்த
1."நடுவுநிலைத் திணையேநண்பகல் வேனிலொடு, முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே" (தொல். அகத். சூ.9.)
|