241

318. வைகுறும் மீனின்-இராக்காலம் விடிதற்குக் காரணமான வெள்ளியாகிய (பி-ம்.வெள்ளியதாகிய) மீன் போல,

பைபய தோன்றும்-ஒளி விட்டுவிளங்காது தோன்றும்,

319. 1நீர்ப்பெயற்று எல்லை போகி-நீர்ப்பெயற்றென்னும் ஊரினெல்லையிலே போய்,

அசைஇ (316) விளக்கின் (317)மீனிற்றோன்றும் (318)நீர்ப்பெயற்றென்க.

319-21. பால் கேழ் வால் உளைபுரவியொடு வடவளம் தரூஉம் நாவாய் சூழ்ந்த நளிநீர் படப்பை-பால்போலும் வெள்ளியநிறத்தினையும் வெள்ளிதாகிய தலையாட்டத்தினையுமுடைய மேற்றிசைக்கண் உளவாகிய குதிரைகளுடனே வடதிசைக்கண் உளவாகிய நுகரப்படும் பொருள்களைக் கொண்டுவந்துதரும் மரக்கலங்கள் சூழ்ந்து கிடக்கப்பட்ட பெருமையையுடைய கடற்பக்கத்தினையும்,

322-4 [மாட மோங்கிய மணன்மலி மறுகிற், பரதர் மலிந்த பல்வேறு தெருவிற், சிலதர் காக்குஞ் சேணுயர் வரைப்பின் :]

மணல் மலி மறுகின் சிலதர்காக்கும் சேண்உயர் வரைப்பின்-மணல் மிக்க தெருவுகளில் தொழில்செய்வார் காக்கப்படும் மிகவுமுயர்ந்த பண்டசாலைகளையும்,

தொழில்செய்வார்-கம்மகாரர்.

பரதர் மலிந்த மாடம் ஓங்கிய பல்வேறு தெருவின்-2பரதவர்மிக்க மாடங்களுயர்ந்த பலவாய் வேறுபட்ட தெருக்களையும்,

325-7. நெல் உழு பகட்டொடு கறவை துன்னா மேழகம் தகரோடு எகினம் கொட்கும் கூழ் உடைநல் இல்-நெல்லினைப் பெறுதற்கு உழுகின்றஎருதுகளுடனே பசுக்கள் நெருங்காவாய் மேழகக்கிடாயோடே நாயும் சுழன்று திரியும் சோறுடைய நன்றான அகங்களையுமுடைய பட்டினம் (336),

இது 3திமிலர் முதலியோரிருப்புக் கூறிற்று.

327. [கொடும்பூண் மகளிர்:]

"காரனங் குலாய்ப்படிந்த காட்சியொப்ப" (காஞ்சிப். கழுவாய்ப்.16)என்பதனாலும் காரன்னமுண்மை அறியப்படும்.


1 மதுராந்தகம் தாலூகாவில் ‘நீர்ப்பேர்' என வழங்கும் ஒரூர் உண்டு; அஃது இதுவாக விருக்கலாமென்று தோற்றுகின்றது.

2 "விலங்குவலைப் பரதவர் மீன்றிமில் விளக்கமும்"(சிலப்.6 : 142)

3 திமிலர்: "வன்கைத் திமிலர்"(மதுரைக். 319); திமில்-மீன்படகு.