281

ரத்து நீரிலேகாண்கின்ற நினது நாழிகைவட்டிலிற்சென்ற நாழிகை இத்துணையென்று சொல்லுகையினாலே,

59. [மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை :]
மத்திகை வளைஇய உடை-புரவியையடிக்கின்ற சம்மட்டி வளைந்து கிடக்கின்ற உடை.

மறிந்து வீங்கு செறிவு உடை-அச்சம்மட்டி மறையும்படி வடிம்பு தாழ்ந்து பெருக்குஞ் செறிதலையுடைய 1புடைவையுடையினையும்,

60. மெய்ப்பை புக்க வெரு வரும் தோற்றத்து-சட்டையிட்ட அச்சம் வரும் தோற்றரவினையும்,

61. வலி புணர் யாக்கை-இயல்பான வலிகூடின மெய்யினையுமுடைய,
வன்கண் யவனர்-தறுகண்மையினையுடைய சோனகர்,

62. புலி தொடர் விட்ட புனை மாண் நல் இல் - புலிச்சங்கிலிவிடப்பட்ட கைசெய்த மாட்சிமைப்பட்ட நன்றாகிய இல்லிலே,

63-4. திரு மணி விளக்கம் காட்டி திண் ஞாண் எழினி வாங்கிய இரு அறை பள்ளியுள்-அழகினையுடைய மாணிக்கமாகிய விளக்கை எரிய வைத்துத் திண்ணிய கயிற்றிற்றிரையைவளைத்த புறவறைக்குள்ளறையிற் படுக்கைக்கண்ணே சென்று,

65-6. [உடம்பி னுரைக்கு முரையா நாவிற், படம்புகு மிலேச்சருழைய ராக :] உரையா நாவின் உடம்பின் உரைக்கும் படம் புகும் மிலேச்சர் உழையர் ஆக-வார்த்தை சொல்லாத நாவினையுடைய கையாலும் முகத்தாலும் வார்த்தைசொல்லும் சட்டையிடும் 2சரவாசிகள் பள்ளி கொள்ளுமிடத்தைச் சூழ்ந்து திரிய .

உரையாநாவென்றார், ஊமைகளென்றற்கு.

67. மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது-பகைவர் மனமறியாமல் மிக்குச்செல்கின்ற போரை நச்சுதலாலே கண்ணுறக்கம்பெறாமல்,

68-9. எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து பிடி கணம் மறந்த வேழம் உள்ளியும் (72)-ஒச்சி வெட்டுகின்ற வாளழுந்துகையினாலே புண்மிக்குப் பிடித்திரளைமறந்த வேழத்தை உள்ளியும்,

67-70. [வேழத்துப், பாம்புபதைப் பன்ன பரூஉக்கை துமிய :] வேழத்து பரூஉ கை பாம்பு பதைப்பன்ன துமிய-யானையினுடைய


1ஆணுடையையும் புடைவையென்பது பண்டைக்கால வழக்கு; "மெய்சூழ்ந்து...........சென்றடைந்தார்" (பெரிய. திருநா. 61) ; இவ்வழக்கு செட்டிநாட்டில் இக்காலத்து உள்ளது,

2 (பி-ம்.)அசாரவாசிகள்', சரவாசிகள்-சரித்துக்கொண்டே வசிப்போர்.