282

பரியகைகள் பாம்பினது பதைக்கின்ற தன்மையையொத்த பதைப்பினையுடையவாக அற்று விழும்படி,

71-2. தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்-தேன்பரக்கும் 1வஞ்சிமாலைக்கு நன்றாகிய வெற்றியை யுண்டாக்கிச் 2செஞ்சோற்றுக் கடனிறுத்துப் பட்ட வீரரைநினைத்தும்,

72-4. தோல் துமிபு வை நுனை பகழி மூழ்கலின் செவி சாய்த்து உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்-பக்கரைகளை யறுத்துக் கூரிய முனையினையுடைய அம்புகள்வந்து அழுந்துகையினாலே செவிசாய்த்துப் புல்லுண்ணாதே வருந்தும் குதிரைகளை நினைத்தும்,

75-6. [ஒருகை பள்ளி யொற்றி யொருகை, முடியொடு கடகஞ்சேர்த்தி. ] ஒரு கை பள்ளி ஒற்றி ஒரு கை கடகம் முடியொடு சேர்த்தி ஒருகையைப் படுக்கையின் மேலேவைத்து ஒருகையிற் கடகத்தை முடியோடே சேரவைத்து

என்றது கையிலே தலையை வைத்தென்றராயிற்று.

நெடிது நினைந்து-இப்படைநொந்தவளவுக்கு நாளை எவ்வாறு பொருமென்று நெடிதாகநினைந்து,

77. பகைவர் சுட்டிய படை கொள் நோன் 3விரல்- 4பகைவரைக் கருதி வைத்த வாளைப்பிடித்த வலியினையுடைய கையாலே வெட்டி வென்று (89) என்க.


1 முல்லை. 78-ஆம் அடி உரையையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.

2 "புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்கா, டிரந்து கோட்டக்க துடைத்து" (குறள், 780); "குஞ்சரத் தலையடுத்துக் கூந்தன்மாக் காலணையாச், செஞ்சோற்றுக் கடனீங்கிச் சினவுவாள் பிடித்துடுத்த, பஞ்சிமேற் கிடந்துடைஞாண் பதைத்திலங்கக் கிடந்தாரை" (சீவக. 2240); "ஒருத்தரின் முன்னஞ் சாத லுண்டவர்க் குரியதம்மா" (கம்ப. கும்ப. 156.) ; "வல்விற், கைம்முனி வனுஞ்செஞ் சோற்றுக் கடன் கழித்திடுதல் வேண்டும்....................என்றான்", "செஞ்சோற்றுக் கடனின்றே கழியேனாகிற் றிண்டோள்கள் வளர்த்ததனாற் செயல்வேறுண்டோ" (வி. பா. நிரைமீட்சி. 90, 17-ஆம் போர். 20)

3விரல்-கை ; "மெல்விரல்-மெல்லிய விரலையுடையகை ................... விரல் : ஆகுபெயர்" (கலித். 54 :9 . ந.) ; "கணவனை நோக்கி யிணைவிரல் கூப்பி" (பெருங். 4. 7: 36)

4 "தெவ்வர்க்கோக்கிய வேல் - பகைவரைக் கொல்லுதற்கு அறுதியிட்டு வைத்த வேல்" (பட்டினப். 299-300, ந.) என்பது இங்கே அறியற்பாலது.