305
235கரைபொரு திரங்குங் கனையிரு முந்நீர்த்
திரையிடு மணலினும் பலரே யுரைசெல
மலர் தலை யுலக மாண்டுகழிந் தோரே
அதனால், குணகடல் கொண்டு குடகடன் முற்றி
யிரவு மெல்லையும் விளிவிட னறியா
240தவலு மிசையு நீர்த்திரள் பீண்டிக்
கவலையங் குழும்பி னருவி யொலிப்பக்
கழைவளர் சாரற் களிற்றின நடுங்க
வரைமுத லிரங்கு மேறொடு வான்ஞெமிர்ந்து
சிதரற் பெரும்பெயல் திறத்தலிற் றாங்காது
245குணகடற் கிவர் தருங் குரூஉப்புன லுந்தி
நிவந்துசெ னீத்தங் குளங்கொளச் சாற்றிக்
களிறுமாய்க்குங் கதிர்க்கழனி
யொளிறிலஞ்சி யடைநிவந்த

235. " கரைகொன் றிரங்குங் கடல்" (சீவக. 1063) ; கரை கொன் றிரங்கு கடல் புகைய" (கூர்ம. இராவணன்வதை. 5)

236. மணலைப்பன்மை சுட்டற்கு உவமித்தல் : " வடுவா ழெக்கர் மணலினும் பலரே " (மலைபடு, 556) ; புறநா. 9 : 11, 43 : 23, 55 : 21 , 136 : 26, 198 : 19, 363 : 4) ; " எத்துணை யாற்று ளிடுமணல் ............ அத்துணையும்பிற ரஞ்சொல்லி னார்மனம், புக்கனம்" (வளையாபதி) ; " தொல்லைநம் பிறவி யெண்ணிற் றொடுகடன் மணலுமாற்றா", " தருமண லலகை யாற்றா" (சீவக. 270, 3048) ; " பரவைவெண்மணலினும் பல புரவியின் பந்தி" (வி.பா.கிருட்டினன். 65)

237. மலர்தலையுலகம் : மதுரைக். 199.

235 - 7. திருவாய்மொழி 4. 1 : 4.

244. (பி - ம்.)‘சிதரற் பெயல் கான்றழிதலிற்'

247. "களிறுமாய் கழனி", " களிறுமாய் கதிர்ச்செநெற் கழனி" (சீவக. 54, 1617) ; " களிறு மாய்க்குஞ் செந்நெ லங்குலை " (நைடதம், சுயம்வர. 138) ; "யானை மறையக் கதிர்த்தலைச் சாலி நீடி " (பிரபு. மாயையுற். 11) ; " களிறு மாய்ப்ப கதழ்ந்தெழு பூம்பயிர்" (தணிகை. நாட்டு. 114) " களிறுமாய் செருந்தியொடு " (மதுரைக். 172)மாய்தல் - மறைதலென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; சிலப். 9 : 2, அடியார் ; சீவக. 453, ந.