321
475வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப்
பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉ மமயமு
மின்றிவட் டோன்றிய வொழுக்கமொடு நன் குணர்ந்து
வானமு நிலனுந் தாமுழு துணருஞ்
480சான்ற கொள்கைச் சாயா யாக்கை
யான்றடங் கறிஞர் செறிந்தனர் நோன்மார்
கல்பொளிந் தன்ன விட்டுவாய்க் கரண்டைப்
பல்புரிச் சிமிலி நாற்றி நல்குவரக்
கயங்கண் டன்ன வயங்குடை நகரத்துச்
485 செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து
நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந் தோங்கி
யிறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையுங்
குன்றுபல குழீஇப் பொலிவான தோன்ற
வச்சமு மவலமு மார்வமு நீக்கிச்
490செற்றமு முவகையுஞ் செய்யாது காத்து
ஞெமன்கோ லன்ன செம்மைத் தாகிச்

481. (பி-ம்.) ‘செறிநர் நோன்மார்'

477-81. முக்காலமுமறியும் அறிஞர் : "புகழ்நுவல முக்காலமு, நிகழ்பறிபவன்", "இம்மூ வுலகி னிருள்கடியு மாய்கதிர்போ, லம்மூன்று முற்ற வறிதலால்" (பு. வெ. 167, அறிவன் வாகை)

482-3. கரண்டை, சிமிலி : "சிமிலிக் கரண்டையன்" (மணி. 3:86) 

484. "நிழற்கயத் தன்ன நீணகர் வரைப்பின்" (அகநா. 105:7) ; "பனிக்கயத் தன்ன நீணகர்" (புறநா. 378:7)

485. "செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்" (நெடுநல். 112) ; “செம்புறழ் புரிசை" (அகநா. 375:13) ; "செம்புறழ் புரிசை", "செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை" (புறநா. 37:11, 201:9) ; "செம்பைச் சேரிஞ்சி", "செம்படுத்த செழும்புரிசை", "செம்புகொப் புளித்த மூன்று மதில்"; (தே.) "செம்புகொண்டன்ன விஞ்சித் திருநகர்" (சீவக. 439) ; "செம்பிட்டுச் செய்த விஞ்சி" (கம்பகும்ப. 159)

488. மதுரைக். 474

491. "சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற், கோடாமை சான்றோர்க் கணி" (குறள், 118)