| சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரு மழையொழுக் கறாஅப் பிழையா விளையுட் பழையன் மோகூ ரவையகம் விளங்க; நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன | 510 | தாமேஎந் தோன்றிய நாற்பெருங் குழுவுங் கோடுபோழ் கடைநருந் திருமணி குயினருஞ் சூடுறு நன்பொன் சுடரிழை புனைநரும் பொன்னுரை காண்மருங் கலிங்கம் பகர்நருஞ் செம்புநிறை கொண்மரும் வம்புநிறை முடிநரும் | 515 | பூவும் புகையு மாயு மாக்களு மெவ்வகைச் செய்தியு முவமங் காட்டி நுண்ணிதி னுணர்ந்த நுழைந்த நோக்கிற் கண்ணுள் வினைஞரும் பிறருங் கூடித் தெண்டிரை யவிரறல் கடுப்ப வொண்பல் | 520 | குறியவு நெடியவு மடிதரூஉ விரித்துச்; சிறியரும் பெரியருங் கம்மியர் குழீஇ நால்வேறு தெருவினுங் காலுற நிற்றரக் கொடும்பறைக் கோடியர் கடும்புடன் வாழ்த்துந் தண்கட னாட னொண்பூங் கோதை | 525 | பெருநா ளிருக்கை விழுமியோர் குழீஇ விழைவுகொள் கம்பலை கடுப்பப் பலவுடன் சேறு நாற்றமும் பலவின் சுளையும்; வேறுபடக் கவினிய தேமாங் கனியும் |
504-6. "மலையவுங் கடலவு மாண்பயந் தரூஉம்...................... ஓடாவம் பலர்" (பெரும்பாண். 67-76) 508-9. "பெரும்பெயர்மாறன் றலைவ னாகக், கடந்தடு வாய்வாளிளம்பல் கோச, ரியனெறி மரபினின் வாய்மொழி கேட்ப" (மதுரைக். 772-4) 516, (பி-ம்.) ‘எண்வகைச் செய்தியும்' 518. கண்ணுள்வினைஞர் : சிலப். 5:30. 516-8. "எவ்வகை யுயிர்களு முவமங் காட்டி, வெண்சுதை விளக்கத்து வித்தக ரியற்றிய, கண்கவ ரோவியம்" (மணி. 3:129-31) 524. (பி-ம்.) ‘தெண்கடனாடன்'; 525. பெருநாளிருக்கை : "திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை" (சிலப். 23 : 56)
|