30-31. வய வேந்தர் ஒள் குருதி சினம் தீயின் பெயர்பு பொங்க-வலியினையுடைய வேந்தருடைய ஒள்ளிய 1குருதியாகிய உலை சினமாகிய தீயின் மறுகிப் பொங்குகையினாலே, 32-8. [தெறலருங் கடுந்துப்பின், விறல்விளங்கிய விழுச்சூர்ப்பிற், றொடித்தோட்கை துடுப்பாக, வாடுற்ற வூன்சோறு, நெறியறிந்த கடிவாலுவ, னடியொதுங்கிப் பிற்பெயராப், படையோர்க்கு முருகயர :] தொடி தோள் 2கை துடுப்பு ஆக (34) ஆடு உற்ற ஊன் சோறு (35) 3வீரவளையை உடையவாகிய தோளையுடைய கைகள் துடுப்பாகக் கொண்டு துழாவி அடுதலுற்ற ஊனினாகிய சோற்றை, நெறி அறிந்த கடி வாலுவன்-இடுமுறைமையறிந்த பேய் 4மடையன். தெறல் அரு கடு துப்பின் (32) விறல். விளங்கிய விழு சூர்ப்பின் (33) அடி ஒதுங்கி பின் பெயரா (37) படையோர்க்கு முருகு அயர (38)-பகைவராற் கோபித்தற்கு அரிய கடிய வலியினையும் வெற்றிவிளங்கிய சீரிய கொடுந்தொழிலினையுமுடையராய் இட்ட அடிவாங்கிப் பின்போகாத வீரர்க்கு வேள்விசெய்யும்படி, 39. அமர் கடக்கும் வியல் தானை-போரைவெல்லும் அகலத்தையுடைய படையினையுடைய, போர்க்களத்தே (28) ஆடுற்றசோற்றை (35) வாலுவன் (36) அடிபெயரா (37) வீரர்க்கு முருகயரக் (38) கடக்குந்தானையென்க. 40-42. [தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற், றொன்முது கடவுட் பின்னர் மேய, வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந :] வரை தாழ் அருவி பொருப்பின் கடவுள்-பக்க மலையிலே விழுகின்ற அருவியினையுடைய பொதியின்மலையிலிருக்கும் கடவுள், தென்னவன் பெயரிய துன் அரு துப்பின் தொல் முது கடவுள் பின்னர் மேய பொருந-5இராவணனைத் தமிழ்நாட்டையாளாதபடி
1 குருதியை உலையாகப் பெய்தல், "அவற்றி னுலையென விரத்தம் விடுவன" (பொருகளத்தலகை வகுப்பு.) 2 கைகளைத் துடுப்பாகக்கொள்ளல் : "அவர்கரவகப்பை யவைகொடு புகட்டி யடுவன" (பொருகளத்தலகை வகுப்பு) 3 தொடி-வீரவளை ; மதுரைக். 720, ந. 4 மடையன்-சோறாக்குவோன். 5 தென்னாட்டை ஆண்டு குடிகளைத் துன்புறுத்தி வந்த இராவணனை, அகத்தியர் பொதியின்மலை உருகும்படி இசைபாடி இலங்கைக்குப் போக்கினரென்பது பண்டை வரலாறு ; அவர் இசையிலே வல்லுநரென்பது, "மன்னு மகத்தியன்யாழ் வாசிப்ப" (திருக்கைலாய ஞானவுலா), "தமிழ்க்குன்றில் வாழுஞ் சடாதாரி பேர்யாழ் தழங்குத் திருக்கை" (தக்க. 539) என்பவற்றாலும் பொதியில் உருகியது, "இனிய பைந
|