296-7. கரு கால் வேங்கை 1இரு சினை பொங்கர் நறு பூ கொய்யும் கானவர் (293) பூசல்-கரியதாளினையுடைய வேங்கையிடத்துப் பெரிய கவடுகளில் தோன்றிய சிறிய கொம்புகளிற்பூத்த நறியபூவைப் பறிக்குமகளிர் புலிபுலி யென்று கூறும் ஆரவாரம், 297-8. இரு கேழ் ஏறு அடு வய புலி பூசலொடு-கரியநிறத்தையுடைய பன்றியைக்கொல்லுகின்ற வலியினையுடைய புலியினது ஆரவாரத்தோடே, ஏறு-2ஆனேறுமாம். 298. அனைத்தும்-முழுவதும், 299-301. [இலங்குவெள் ளருவியொடு சிலம்பகத் திரட்டக், 3கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பணிந், தருங்கடி மாமலை தழீஇ :] இலங்கு வெள் அருவியொடு கரு கால் வெற்பு அணிந்து-விளங்குகின்ற வெள்ளிய அருவி வீழ்கின்றவாற்றாலே கரிய நீரோடுங்கால்களையுடைய பக்கமலைகள் சூழ்ந்து, சிலம்பு அகத்து இரட்ட-மலையிடத்தே மாறிமாறி யொலிப்ப, 4குறிஞ்சி சான்ற-புணர்ச்சியாகிய உரிப்பொருளமைந்த, அரு கடி மா மலை தழீஇ-பெறுதற்கரிய சிறப்பினையுடைய பெரிய மலை தழுவப்பட்டு, 301. ஒருசார்-ஒருபக்கம், ஒருசார் (301), அருவியாற் (299) கருங்காலையுடையவெற்பணிதலாலே (300) நீடி (288) ஈண்டி (290) விளையுஞ் சாரலிற் கிளிகடி பூசல் (291), கானவர் பூசல் (293), அட்டபூசல் (295), கொய்யும்பூசலாகிய (297) அனைத்துப்பூசலும் புலிப்பூசலோடே (298) சிலம்பகத்து இரட்டக் (299) குறிஞ்சிசான்ற (300) அருங்கடியினையுடைய மலை தழுவப்பட்டு (301) என முடிக்க. 302. [இருவெதிர்ப் பைந்தூறு கூரெரி நைப்ப :] இரு வெதிர்கூர் எரி பைந்தூறு நைப்ப-5பெரிய மூங்கிலிற்பிறந்த மிக்கநெருப்பு பசிய தூறுகளைச் சுடுகையினாலே,
1 (பி-ம்.) ‘பெருஞ்சினைப்' 2 (பி-ம்.) ‘ஆனையுமாம்' 3 (பி-ம்.) ‘கருங்கோற்குறிஞ்சி' 4 "புணர்தலின்றி இல்லறம் நிகழாமையின் புணர்தற் பொருட்டாகிய குறிஞ்சியை அதன்பின் வைத்தார். இதற்குதாரணம் இறந்தது ; ‘கருங்காற் குறிஞ்சி சான்றவெற் பணிந்து' என்பது கரு" (தொல். அகத். சூ. 5, ந.) என்றவிடத்து இவ்வுரையாசிரியர் இவ்வடிக்குக்கொண்ட பொருளும், இங்கே அந்வயஞ்செய்து கொண்ட பொருளும் மாறுபடுதல் ஆராய்தற்குரியது. 5 "வான்றொடர் மூங்கி றந்த வயங்குவெந் தீயி தென்னத், தான் றொடர் குலத்தை யெல்லாந் தொலைக்குமா சமைந்து நின்றாள்", |