381

ஆர் களமர் இரு செரு மயக்கமும்-அச்சந்தோன்றுகின்ற யானையை யொத்த போக்கினையுடைய கள்ளினையுண்ணும் வீரர் தம்மிற் பெரிய போரைச்செய்யும் கலக்கமும்.

களத்தே சேறலிற் களமரென்றார்.

394. அரியவும் பெரியவும்-ஈண்டுப் பெறுதற்கரியனவுமாய் அவைதாம் சிறிதின்றி மிகவுள்ளனவுமாய்ப் பலவாய் வேறுபட்ட பண்ணியம் (405) என மேலே கூட்டுக.

வருவன பெயர்தலின்-யானையும் (383) தேரும் (388) புரவியும் (391) களமர் செருமயக்கமும் (393) பல்காலும் வருவனவாய் மீளுகையினாலே,

395-6. [தீம்புழல் வல்சிக் கழற்கான் மழவர், பூந்தலை முழவி னோன்றலை கடுப்ப :]1தீ புழல் வல்சி பூ தலை கழல் கால் மழவர் முழவின் நோன் தலை கடுப்ப-இனிய பண்ணியாரங்களாகிய உணவினையும் பொற்பூக்களையுடைய தலையினையும் விரக்கழலணிந்த காலினையுமுடைய மழவர் முன்கொட்டும் வீரமத்தளத்தினது வலிய கண்ணையொக்க உருண்ட,

2தீம்புழல்-இருப்பைப்பூவுமாம். பூத்தலை : விகாரம். 3மழவர்-சிலவீரர். "உருவக் குதிரை மழவ ரோட்டிய" (அகநா. 1:2) என்றார் பிறரும். கடுப்வென்னுஞ் செயவெனச்ச உவமவுருபிற்கு உருண்டவென சொல்வருவிக்க.

397. பிடகை பெய்த கமழ் நறு பூவினர்-பூந்தட்டிலே இட்டு வைத்த மிகவும் நாறுகின்ற நறிய பூவினையுடையாரும்,

398. பல வகை 4விரித்த எதிர் பூ கோதையர்-பலவகையாக விரித்து வைத்த ஒன்றற்கொன்று மாறுபட்ட பூமாலைகளையுடையாரும்,

399. பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தர்-இடிக்க வல்லார் பலரும் திரண்டு இடித்த பூந்தாதுக்கல்போலப் 5பரக்குஞ் சுண்ணத்தை யுடையாரும்,

தாது-நீறுமாம். ந வமணிகளும், 6பொன்னும், சற்தனமும், கருப்


1 (பி-ம்) ‘தீம்புலவல்சி'

2 "இருப்பை.............. இழுதி னன்ன தீம்புழல்", "தீம்புழ லுணீஇய, கருங்கோட் டிருப்பை யூரும், பெருங்கை யெண்கு" (அகநா. 9:3-5, 171:13-5)

3 மதுரைக் 687. உரை.

4 (பி-ம்.) ‘விரிந்த வெதிர்ப்பூங் கோதையர்'

5 "சுண்ணம்போலச் சிதராய்ப் பரந்து கிடத்தலிற் சுண்ணமென்றார்" (தொல். எச்ச. சூ. 10. சே) என்பதனாற் சுண்ணம் பரந்திருத்த லுணரப்படும்.

6 "செம்பொற் சுண்ணஞ் சிதர்ந்த திருநுதல்", "அனிச்சக் கோதையு மாய்பொற் சுண்ணமும்........சுந்தரப் பொடியுஞ் சுட்டிச