712. நறு தோள் புணர்ந்து-நறிய தோளைமுயங்கி, 713. கோதையின் பொலிந்த சேக்கை துஞ்சி -1தூக்குமாலைகளாற் பொலிவுபெற்ற படுக்கையிலே துயில்கொண்டு, புணர்ந்து பின்னைத் துயிலுங்காலத்துத் தனியேதுயிலுதல் இயல்பென்பது தோன்றப் புணர்ந்து துஞ்சியென்றார். "ஐந்துமூன் றடுத்த செல்வத் தமளியி னியற்றி" (சீவக. 838) என்றார் பிறரும். 714. திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து-செல்வத்தை நினைந்து இன்புறுகின்ற பற்றுள்ளம், உறக்கத்தையுணர்த்துகையினாலே அது நினைத்து இனிதாகப் பின் எழுந்து, என்றது, தன்செல்வம் இடையறாதொழுகுதற்கு வேண்டுங் காரியங்களை விடியற்காலத்தே மனத்தானாராயவேண்டுதலின், துயிலெடுப்புக்கு இது காரணமாயிற்று ; "வைகறை யாமந் துயிலெழுந்து தான்செய்யு, நல்லறனு மொண்பொருளுஞ் சிந்தித்து" (4) என்றார் ஆசாரக் கோவையில். இனி நன்றாகிய துயிலென்றுமாம். 715-24. [திண்கா ழார நீவிக் கதிர்விடு, மொண்கா ழாரங் கவைஇய மார்பின், வரிக்கடைப் பிரச மூசுவன மொய்ப்ப, வெருத்தந் தாழ்ந்த விரவுப்பூந் தெரியற், பொலஞ்செயப் பொலிந்த நலம்பெறு விளக்கம், வலிகெழு தடக்கைத் தொடியொடு சுடர்வரச், சோறமை வுற்ற நீருடைக் கலிங்க, முடையணி பொலியக் குறைவின்று கவைஇ, வல்லோன் றைஇய வரிப்புனை பாவை, முருகியன் றன்ன வுருவினை யாகி :] 2வல்லோன் தைஇய வரி புனை பாவை (723) முருகு இயன்றன்ன உருவினை ஆகி (724)-சித்திரகாரி பண்ணப்பட்ட எழுதிக்கைசெய்த பாவையிடத்தே தெய்வத்தன்மை நிகழ்ந்தாற்போன்ற வடிவினையுடையையாய்,
1."தொங்கல் சுற்றுந் தாழுமின் பஞ்சணை" (அழகரந்தாதி, 44) 2.எழுதப்பட்ட பாவையிடத்தே தெய்வத்தன்மை நிகழ்தல், "கோழ்கொள், காழ்புனைந் தியற்றிய வனப்பமை நோன்சுவர்ப், பாவையும் பலியெனப் பெறாஅ" (அகநா. 369:6-8) ; "வழுவறு மரனு மண்ணுங் கல்லு, மெழுதிய பாவை பேசா வென்ப, தறிதலு மறிதியோ" "கொடித்தேர் வீதியுந் தேவர் கோட்டமு, முதுமர விடங்களு முதுநீர்த் துறைகளும், பொதியிலு மன்றமும் பொருந்துபு நாடிக், காப்புடை மாநகர்க் காவலுங் கண்ணி, யாப்புடைத் தாக வறிந்தோர் வலித்து, மண்ணினுங் கல்லினு மரத்தினுஞ் சுவரினுங், கண்ணிய தெய்வதங்காட்டுநர் வகுக்க, வாங்கத் தெய்வத மவ்விட நீங்கா", "தொன்று முதிர் கந்தின், மயனெனக் கொப்பா வகுத்த பாவையி, னீங்கேன்யான்" (மணி. 21:115-7, 120-27, 131-3) என்பவற்றாலும் விளங்கும்.
|