435
15பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி
யிருங்களி பரந்த வீர வெண்மணற்
செவ்வரி நாரையோ டெவ்வாயுங் கவரக்
கயலற லெதிரக் கடும்புனற் சாஅய்ப்
பெயலுலந் தெழுந்த பொங்கல் வெண்மழை
20யகலிரு விசும்பிற் றுவலை கற்ப
வங்க ணகல்வய லார்பெயர் கலித்த
வண்டோட்டு நெல்லின் வருகதிர் வணங்க
முழுமுதற் கமுகின் மணியுற ழெருத்திற்
கொழுமட லவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை
25நுண்ணீர் தெவிள வீங்கிப்புடைதிரண்டு
தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற
நளிகொள் சிமைய விரவுமலர் வியன்காக்
குளிர்கொள் சினைய குரூஉத்துளி தூங்க 
மாட மோங்கிய மல்லன் மூதூ
30ராறுகிடந் தன்ன வகனெடுந் தெருவிற்
பாடலைக் கண்ணிப் பரேரெறுழ்ந் திணிதோண்

பீரென்னுஞ் சொல் அம்முச்சாரியை பெற்றுவருதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். புள்ளிமயங். சூ70, ந.

18. சாயென்பது நுணுக்கமாகிய குறிப்பை உணர்த்துமென்பதற்கு இவ்வடி மேற்கோள் (தொல். உரி. சூ. 34, சே. ந ; இ - வி. சூ. 281) ; இவ்வடி பெயரின்பின் உரிச்சொல் நின்றதற்குமுதாரணம் ; (இ - வி. சூ. 280 ; அகநா. 303 : 19 - 20.

19. (பி - ம்.)‘ பெயலுழந்து '

பொங்கல் வெண்மழை : "பொங்க லிளமழை" (ஐங். 276 : 3) ; " பெய்து புறந்தந்து பொங்க லாடி, விண்டுச் சேர்ந்த வெண்மழை" (பதிற். 55 : 14 - 5) ; " பெய்து புலந்துறந்த பொங்கல் வெண்மழை" (அகநா. 217 : 1)

வெண்மழை : முல்லை. 100. 

20. அகலிரு விசும்பு :பெரும்பாண் 1.

" மாரி கற்பான் றுவலைநாட் செய்வ தேபோல்" (சீவக. 2070)

21 - 2. அகநா. 13:17 - 21.

26. " தகைசெய் தீஞ்சேற் றின்னீர்ப் பசுங்காய்" (மதுரைக். 400)

30. மதுரைக். 359-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

31. படலைக்கண்ணி : பெரும்பாண். 60-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. 

பரேரெறுழ் : பட்டினப். 294.