440
யறுவறு காலைதோ றமைவரப் பண்ணிப்
105பல்வேறு பள்ளிதொறும் பாயிரு ணீங்கப்
பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை யல்ல
தாடவர் குறுகா வருங்கடி வரைப்பின்
வரைகண் டன்ன தோன்றல வரைசேர்பு
வில்கிடந் தன்ன கொடிய பல்வயின்
110வெள்ளி யன்ன விளங்குஞ் சுதையுரீஇ
மணிகண் டன்ன மாத்திரட் டிண்காழ்ச்
செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவ
ருருவப் பல்பூ வொருகொடி வளைஇக்
கருவொடு பெயரிய காண்பி னல்லிற்
115றசநான் கெய்திய பணைமரு ணோன்றா
ளிகன்மீக் கூறு மேந்தெழில் வரிநுதற்
பொருதொழி நாக மொழியெயி றருகெறிந்து
சீருஞ் செம்மையு மொப்ப வல்லோன் 
கூருளிக் குயின்ற வீரிலை யிடையிடுபு
120தூங்கியன் மகளிர் வீங்குமுலை கடுப்பப் 
புடைதிரண் டிருந்த குடத்த விடைதிரண்
டுள்ளி நோன்முதல் பொருத்தி யடியமைத்துப்
பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில்

101 - 3. முல்லை. 85-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க ;

" வேண்டிடந் தோறுந் தூண்டுதிரிக் கொளீஇக், கைவயிற் கொண்ட நெய்யகற் சொரியும், யவனப் பாவை யணிவிளக் கழல " (பெருங். 1. 47 : 173 - 5)

107. " அரச ருரிமையி லாடவ ரணுகார்" (மணி . 23 : 55) ; " அரசன் கோயிலில் ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பி னுள்ளே" என இவ்வடியை உரை நடையிலமைத்துக்கூறுவர் ; சீவக. 1713, ந.

" குழைமுகமகளிர் காக்கும் புரிசையெனவே அந்தப்புரமாயிற்று ; 'ஆடவர்.........வரைப்பின் ' என்றார் பிறரும் " (சீவக. 275, ந.)

109. (பி - ம்.) ‘ விற்கிடந்தன்ன................பலவயின் '

112. மதுரைக். 485-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

115. சான்றோர் செய்யுட்கண் வடசொல் திரிந்துவந்ததற்கு இவ்வடி மேற்கோள் (தொல். எச்ச. சூ.6, சே. ந ; தண்டி. சூ.25, உரை ; இ - வி. சூ. 175, 635) ; " தசநூறு : இது கிரந்தமுந் தமிழுங் கூடியவாறு ; "தசநான் கெய்திய............ தாள்" இது நெடுநல்வாடை" (தக்க. 635 , உரை)