444
சுவன்மிசை யமைத்த கையன் முகனமர்ந்து
நூல்கால் யாத்த மாலை வெண்குடை
185தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே.

183. முகனமர்ந்து : குறள். 84, 92 - 3.

185. (பி - ம்.) ‘ பரம்புதுளி '

" ஊதையுந், தாதுளர் கானற் றவ்வென் றன்றே" (நற். 319 ; 1-2) ; " தவ்வெனக் குடித்தி" (குறுந். 356 : 4)

தவ்வென்பது குறிப்புமொழியென்றுகூறி, இவ்வடிகளை மேற்கோளாகக்காட்டினர் ; குறள். 1144, பரிமேல்

186. (பி - ம்.) ‘ யாமத்துப்பள்ளி '

186 - 8. தொல். கற்பு. சூ. 34, ந. மேற்.

176 - 88. " அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ " என்பதற்கு இவ்வடிகள் மேற்கோள் ; தொல். புறத். சூ. 8, ந.

இதன் பொருள்

இப்பாட்டிற்கு நெடுநல்வாடை யென்று பெயர் கூறினார். இப்பெயர் நெடிதாகிய நல்ல வாடையென விரிதலிற் பண்புத்தொகையாயிற்று. 1வாடையென, வாடைக்காற்றிற் றோன்றின கூதிர்ப்பாசறையை யுணர்த்தலிற் பிறந்தவழிக் கூறலென்னும் (தொல். வேற்றுமைமயங்கு. சூ. 31) ஆகுபெயராய் நின்றது. இப்பாட்டினுள்," கூதிர்நின் றன்றாற் போதே " (72) எனவும் , " கூதிர்ப் பானாள் " (12) எனவுங் கூறுகின்றாராதலின், இது, வாகை தானே பாலையது புறனே " (தொல். புறத். சூ.18) எனப் பாலைக்குப்புறனாகக் கூறிய வாகைத்திணையாய் அதனுள், "கூதிர் வேனி லென்றிரு பாசறைக், காதலி னொன்றிக் கண்ணிய மரபினும்" (தொல். புறத். சூ. 21) எனக்கூறிய கூதிர்ப்பாசறையேயாயிற்று. தலைவனைப் பிரிந்திருந்து வருந்துந்தலைவிக்கு 2ஒருபொழுது ஓரூழிபோல நெடிதாகிய வாடையாய்ப் பாலையாகிய உரிப்பொருளுணர்த்திற்று. அகத்


1 " வடந்தைத் தண்வளி யெறிதொறு நுடங்கி " (நெடுநல். 173) என்று வாடை இந்நூலிற் குறிப்பிடப்பட்டது காண்க. 

2 "ஊழியிற் பெரிதா னாழிகை யென்னும் " (பெரியதிருமொழி)