479
225யந்தி யந்தண ரயரக் கானவர் 
விண்டோய் பணவை மிசைஞெகிழி பொத்த
வான மாமலை வாய்சூழ்பு கறுப்பக் கானங்
கல்லென் றிரட்டப் புள்ளின மொலிப்பச்
சினைஇய வேந்தன் செல்சமங் கடுப்பத் 
230துனைஇய மாலை துன்னுதல் காணூஉ
நேரிறை முன்கை பற்றி நுமர்தர
நாடறி நன்மண மயர்கஞ் சின்னாட் 
கலங்க லோம்புமி னிலங்கிழை யீரென
வீர நன்மொழி தீரக் கூறித்
235துணைபுண ரேற்றி னெம்மொடு வந்து
துஞ்சா முழவின் மூதூர் வாயி 
லுண்டுறை நிறுத்துப் பெயர்ந்தன னதற்கொண்
டன்றை யன்ன விருப்போ டென்று
மிரவரன் மாலைய னேவரு தோறுங்
240காவலர் கடுகினுங் கதநாய் குரைப்பினு

225. அந்தியந்தணரயர : "அந்தி யந்தண ரருங்கட னிறுக்கும்" (புறநா. 2:22) ; "அந்நி யந்தணர் செந்தீப் பேண" (மணி. 5:133)

215-30. மாலைவருணனை.

231. நேரிறை முன்கை : ஐங். 493:4.

232. நாடறி நன்மணம் : ‘பலரறி மணமவர் படுகுவர்" (சிலப். 24 : "வேலனார்")

234. ஈரநன்மொழி : சிறுபாண். 93.

231-4. "எம்மூர் வியன்றுறை, நேரிறை முன்கை பற்றிச், சூரர மகளிரோ டுற்ற சூளே" (குறுந். 53:5-7) 

235. "மடநா குடனாகச், செல்லு மழவிடைபோற் செம்மாந்து" (நள. சுயம். 156) ; கம்ப. பூக்கொய். 34

238. "தலைநா ளன்ன பேணலன்" (நற். 332:8) ; "இன்றையன்ன நட்பின்", "பெருவரை யடுக்கத்துக் கிழவ னென்று, மன்றையன்ன நட்பினன்" (குறுந். 199:6, 385 : 6-7) ; "தண்டாக் காதலுந் தலைநாட் போன்மே" (அகநா. 332:15) ; " இன்றே போல்கநும் புணர்ச்சி" (புறநா. 58:28)

239. மாலை, இயல்பென்னுங் குறிப்பை யுணர்த்துமென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். உரி. சூ. 16, இளம். சே. ந ; இ-வி. சூ. 290, உரை.