தழலாவது கையாற் சுற்றினகாலத்துத் தன்னிடத்துப் பிறக்கும் ஓசையாற் கிளி முதலியவற்றை ஓட்டுங்கருவி ;கவணென்பாருமுளர். தட்டையும் - தட்டையும், தட்டையாவது மூங்கிலைக் கண்ணுக்குக்கண்உள்ளாகநறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசையுண்டாக ஒன்றிலேதட்டுவதோர் கருவி. குளிரும் - குளிரும், குளிராவது இவைபோல்வதோர் கிளிகடி 1கருவி. பிறவும் - ஏனையவும், பிறவென்பது கவண்முதலியவற்றை. 44. கிளி கடி மரபின ஊழ் ஊழ் வாங்கி - தழலும் தட்டையும் குளிரும் பிறவுமாகிய கிளியோட்டும் முறைமையினையுடையவற்றை முறையே முறையே கையிலே வாங்கி ஓட்டி, 45. உரவு கதிர் தெறூஉம் உருப்பு அமிர் அமயத்து - மிகுதலையுடைய ஞாயிற்றின் கிரணங்கள்சுடும் வெம்மைவிளங்குகின்ற பொழுதிலே ஊழூழ்வாங்கி (44) என்க. 46. விசும்பு ஆடு பறவை வீழ் பதி படர - ஆகாயத்தேபறக்கும் பறவைகளெல்லாம் தாம்விரும்புஞ் 2சேக்கைகளிலே செல்லும்படியாக, 47-53. [நிறையிரும் பௌவங் குறைபட முகந்துகொண், டகலிரு வானத்து வீசுவளி கலாவலின், முரசதிர்ந் தன்ன வின்குர லேற்றொடு, நிரைசெல னிவப்பிற் கொண்மூ மயங்கி, யின்னிசை முரசிற் சுடர்ப்பூட் சேஎ, யொன்னார்க் கேந்திய விலங்கிலை யெஃகின், மின் மயங்கு கருவிய :] நிறை இரு பௌவம் குறைபட முகந்துகொண்டு (47) முரசு அதிர்ந் தன்ன இன் குரல் ஏற்றொடு (49) நிரை செலல் நிவப்பின் கொண்மூ (50) - நிறைந்த கரியகடலைக் குறையுண்டாம்படிமுகந்துகொண்டு முரசு சிறிதுமுழங்கினாற்போன்ற இனிய குரலையுடைய உருமேற்றோடே நிரைத்துச் செல்லுதலையுடைய ஓக்கத்தினையுடையமேகம், இன் இசை முரசின் 3சுடர் பூண் சேஎய் (51) ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின் (52) மின் மயங்கு கருவிய (53) - இனிய ஓசையை யுடைத்தாகிய முரசினையும், ஒளியினையுடையவாகிய அணிகலங்களையு முடையமுருகன் அசுரரைக் கொல்லுதற்கெடுத்த விளங்குகின்ற இலைத் தொழிலையுடைய வேம்போல மின்னுமயங்குகின்ற தொகுதிகளையுடைய வாய்,
1தினைப்புனத்திற் கிளியோப்புவோர் மூங்கிலை வீணைபோற் கட்டித் தெறிக்குங் கருவியென்பர்,தஞ்சைவாணன் கோவையுரையாசிரியர். 2சேக்கை - கூடு ; "சேக்கை மரனொழியச் சேணீங்கு புள்" (நாலடி. 30) 3"பொலம்பூட் சேஎய்" (முருகு. 271)
|